இலாசுப்பேட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am

இலாசுப்பேட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

புதுச்சேரி, ஏப். 7- புதுச்சேரி இலாசுப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாங்கத்திற்கு ஆதரவாக, சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் உழவர் சந்தை எதிரில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

சங்கத்தின் நகரக் கிளைத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், சங்க நிர்வாகிகள் விஜயகுமார், குமார், மனோ, பழனியாண்டி, தாமு உள்ளிட்ட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் ஆட்டோக்களில் தேர்தல் சின்னங்களை ஏந்தியும், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் 'அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்' சின்னத்திற்குத் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், தொகுதி மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் வேட்பாளர் ராஜாங்கத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர்கள் பொதுமக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டனர்.