ஆட்டோ ஓட்டுநரின் மகள் 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை
10 May 2026, 1:37 am

ஆட்டோ ஓட்டுநரின் மகள் 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை

சென்னை, மே 9 – அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். சந்தியா, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கணக்குப்பதிவு, பொருளியல், வணிகவியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றுள்ள அவர் கூறுகை யில், “எதிர்பார்த்ததை விட அதிக மதிப் பெண்கள் பெற்றுள்ளேன்.

ஆசிரியர்கள் எனக்காக சிறப்பு தேர்வுகளை நடத்தினர். எந்த நேரத்திலும் சந்தேகங்களை தெளிவு படுத்தி உதவினர்.

கூடுதலாக, நிதி உதவியும் வழங்கினர். தேர்வுக்கான தயாரிப்பின் போது, மொபைல் போன் பயன்படுத்துவதையே தவிர்த்தேன்” என்றார்.

சந்தியாவின் தந்தை ஆர்.சரவணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 130வது வட்ட கிளைச் செயலாளராகவும், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் கோடம்பாக்கம் பகுதி தலைவராகம் செயலாற்றி வருகிறார். த

னது மகள் அதிக மதிப்பெண் பெற்றது குறித்து உவகையோடு பேசிய ஆர்.சரவணன், “படிப்பதற்கு தவிர பிற காரணங்களுக்காக செல்போனையே சந்தியா பயன்படுத்தியது கிடையாது. தொழிலாளர்களின் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் பெறு வதை பார்த்து, என் மகளும் அப்படியே உயர்வாள் என்று நினைத்தேன்.

அதன்படியே நடந்து விட்டது

.இதனால் உருவான மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

பெருமையாக இருக்கிறது,” என்றார்.

இந்நிலையில் ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் கோடம்பாக்கம் பகுதி 28வது மாநாட்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செந்தில்குமார், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் இ.உமாபதி, சிபிஎம் தி.நகர் பகுதிச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் சந்தியாவிற்கு ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.