தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சின்னாளப்பட்டியில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட வேண்டும் ஆட்டோ சங்க பேரவை வலியுறுத்தல்

28 Dec 2025, 5:05 pm
சின்னாளப்பட்டியில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட வேண்டும் ஆட்டோ சங்க பேரவை வலியுறுத்தல்
<p><strong>சின்னாளப்பட்டியில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட வேண்டும் ஆட்டோ சங்க பேரவை வலியுறுத்தல்</strong></p> <p>சின்னாளப்பட்டி, டிச.28- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா சின்னா ளப்பட்டி ஆட்டோ சங்கத்தின் &nbsp;32-வது பேரவை கூட்டம், சங்கத் தலைவர் என். தங் கப்பாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக் கத்தில் மறைந்த ஆர்.பிர பாகரனுக்கு அஞ்சலி தீர்மா னம் வாசிக்கப்பட்டது. சிஐ டியு ஒன்றியக் கன்வீனர் வி. கே.முருகன் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற் றினார். சங்கத்தின் கிளைச் செய லாளர் ஆர்.பாலமுருகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக என்.தங்கப் பாண்டி, செயலாளராக ஆர். பாலமுருகன், பொருளாள ராக எஸ்.பாலசுப்பிரமணி யம் ஆகியோர் தேர்வு செய் &nbsp;யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் என்.பாண்டியன் நிறைவுரை யாற்றினார். &nbsp;கூட்டத்தில், சின்னாளப் பட்டி நகர் முழுவதும் உள்ள &nbsp;குண்டும் குழியுமான சாலை களை உடனடியாக செப்ப னிட வேண்டும். தேர்தல் வாக் &nbsp;குறுதியில் ஆட்டோ தொழி லாளர்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறை வேற்ற வேண்டும். சின்னா ளப்பட்டி நகரில் வழித்தடம் மாறி இயக்கப்படும் மினி &nbsp;பேருந்துகளை கட்டுப் &nbsp;படுத்தி, உரிய வழித்தடத்தில் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் &nbsp;டும் உள்ளிட்ட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன. கூட்டத்தின் முடிவில் சேசு ராஜ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.