கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
21 Dec 2025, 3:21 pm

ஆட்டோ விபத்து: 10 பேர் காயம்

சேலம், டிச.21- மேட்டூரில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 10 பேர் காய மடைந்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி, நேரு நகரில் கிறிஸ் தவ தேவாலயம் உள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று ஆல யத்தில் வழிபாடு நடத்திவிட்டு 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் (38) என்பவர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றதால், கட்டுபாட்டை இல்லாத ஆட்டோ, அப்போது அங்கு நடந்து சென்ற பிரவீனா (36) என்ற பெண் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன், பிரவீனா மற்றும் ஆட்டோவிலிருந்த 8 பேரும் காயமடைந் தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர் பாக மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 ஆவது நாளாக செவிலியர்கள் போராட்டம்

கோவை, டிச.21- பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி 3 ஆவது நாளாக செவிலியர்கள் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் போராட்டத்தில் ஈடு பட்ட எம்ஆர்பி செவிலியர்கள் கைது செய்து செய்யப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் செவிலியர்கள் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி, ஞாயிறன்று 3 ஆவது நாளாக போராட்டம் தொடர்கி றது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ரவி, மாவட்டப் பொருளாளர் பி.நடராஜன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத்தலைவர் வி.சாந்தி உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். திருப்பூர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங் கம் ஆதரவு தெரிவித்தது. இதில், மாவட் டத் தலைவர் விமல் ராஜ், செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் ஆனந்த், நிதிஷ், பிரவீன், புனிதன் பங்கேற்றனர்.