முந்தய பக்கம்

மீனவர் காலனியில் கொண்டாடப்பட்ட ஆட்டிசம் தினம்

2 Apr 2026, 3:50 pm
மீனவர் காலனியில் கொண்டாடப்பட்ட ஆட்டிசம் தினம்

மீனவர் காலனியில் கொண்டாடப்பட்ட ஆட்டிசம் தினம்

அறந்தாங்கி, ஏப். 2-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியில் செயல்பட்டு வரும் ஆயத்த பயிற்சி மையத்தில், ஆட்டிசம் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி வட்டார மையத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மீனவர் காலனியில் செயல்பட்டு வரும் ஆயத்த பயிற்சி மையத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தலைமையில் ஆட்டிசம் தினம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்வில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு பலூன் உடைத்தல், ரொட்டி கடித்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல். உயரம் தாண்டுதல், ஓடுதல், வரைதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.  ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வன், இயன் முறை மருத்துவர் செல்வகுமார், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram