தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

20 Nov 2025, 3:46 pm
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ராங்கி - சிராக் ஜோடி கலக்கல்

பிரபல சர்வதேச பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான, ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 34ஆவது சீசன் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி வியாழனன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு 2 ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, சீன தைபேவின் வூ - ஷூ ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராங்கி - சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.  பிரணோய் அவுட் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் அதிகம் எதிர்பார்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணோய், இந்தோனேசியா வீரர் பர்கனிடம் 19-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். இதே பிரிவில் ஆயுஷ் செட்டி, லக்சயா சென் ஆகியோரும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

மகளிர் பிரிவில் யாரும் பங்கேற்கவில்லை

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச அளவில் முக்கிய தொடராக இருந்த போதிலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணியில் பெண்கள் கலந்து கொண்டனர். ஆனால்  தொடக்கம் முதலே அவர்கள் வெளியேறிவிட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா மைதான சர்ச்சை  பெரிய விவகாரமாக மாறியது ஏன்?

நாட்டில் பல கிரிக்கெட் மைதானங்கள் இருந்தாலும் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, தில்லி, மும்பை, மொகாலி உள்ளிட்ட மைதானங்களுக்கு தனிச்சிறப்பு உள்ளது. காரணம் பிட்ச் அமைப்பு மிக அசத்தலாக இருப்பதால் பேட்டிங், பந்துவீச்சு சரிசமமாக எடுபடும். இதனால் அந்த மைதானங்களில் நடைபெறும் ஆட்டங்கள் மிக சுவாரஸ்யமாகவும், சாதனை அம்சங்களுடன் இருக்கும். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா பிட்ச் படுமோசமாக இருந்தது. வேகம் மற்றும் பேட்டிங் எடுபடவில்லை. சுழற்பந்துவீச்சு மட்டுமே ஈடுபட்டது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தான் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மைதான பிட்சை அமைக்க கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் கண்டனத்துக்குரியது என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ ஸ்போர்ட்  சிறந்த ஆப்பிரிக்க கால்பந்து வீரர்

2025ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான சிஏஎப் (Confederation of African Football - CAF) விருதை வென்றார் மொராக்கோ வீரர் அச்ரப் ஹகிமி. சிறந்த வீராங்கனையாக கிச்லானே செபாக் (மொராக்கோ), சிறந்த கோல் கீப்பராக (மொராக்கோ), சிறந்த மகளிர் கீப்பர் சியாமாகா நடோசி (நைஜீரியா) உள்ளிட்டோரும் ஆப்ரிக்கன் ஸ்டாராக விருதுகளை வென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.