விளையாட்டு
13 Feb 2026, 5:58 pm

டி-20 உலகக்கோப்பை ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த ஆஸி.,

10ஆவது சீசன் ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் (வெள்ளியன்று) ஆஸ்தி ரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்தி ரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கள மிறங்கிய ஜிம்பாப்வே அணி தொட க்கம் முதலே நிதான அதிரடியுடன் ரன் சேர்க்க ஆரம்பித்தது. 7 பந்துவீச்சாளர்களுடன் சூப்பர் பலத்துடன் களமிறங்கிய ஆஸ்திரே லிய அணியின் பந்துவீச்சு ஜிம்பாப்வே யிடம் துளியளவு கூட எடுபடவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஜிம்பாப்வேயின் மிடில் ஆர்டரை (பிரியான் - 65 ரன்கள், மரு மானி - 35 ரன்கள், ரயான் புரூல் - 35 ரன்கள், சிக்கந்தர் ரசா - 25 ரன்கள்) உடைக்கக் கூட முடியாமல் கடுமை யாக போராடினர். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டோய்னிஸ், கிரீன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிரட்டல் 120 பந்துக்கு 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கு டன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வே அணியின் முஷ ராபானி (4 விக்கெட்டுகள்), பிராட் எவன்ஸ் (3 விக்கெட்டுகள்) ஆகியோ ரின் மிரட்டலான பந்துவீச்சால் 4.3 ஓவர்களில் 29 ரன்களுக்கு ஆஸ்தி ரேலிய அணியின் மிடில் ஆர்டர் உருக் குலைந்தது. ரென்ஷா (65 ரன்கள்), மேக்ஸ்வெல் (31 ரன்கள்) வெற்றிக் காக போராடியும் பலனில்லை. இறு தியில் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர் களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாம்பியன் அணிகளுள் ஒன்றான பலமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை கோப்பை வென்றது போல கொண்டாடியது. ஜிம்பாப்வே அணியின் வெற்றி ஆஸ்திரேலியா வுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் உல கிற்கும் அதிர்ச்சி சம்பவம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

அயர்லாந்து - ஓமன் (குரூப் பி) நேரம் : காலை 11:00 மணி இடம் : கொழும்பு, இலங்கை இங்கிலாந்து - ஸ்காட்லாந்து (குரூப் சி) நேரம் : மதியம் 3:00 மணி இடம் : கொல்கத்தா, மேற்கு வங்கம் நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா (குரூப் டி) நேரம் : இரவு 7:00 மணி இடம் : அகமதாபாத், குஜராத்

குளிர்கால ஒலிம்பிக் 2026 : தங்க வேட்டையில் 14 நாடுகள்

25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 10ஆவது நாளில் நார்வே, இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஜப்பான், தென் கொரியா, செக்குடி யரசு, ஸ்லோவேனியா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட 14 நாடுகள் தங்க வேட்டையில் (வெள்ளி, வெண்கலம் சேர்த்து) இறங்கியுள்ளன. அதே போல கனடா, சீனா, நியூஸிலாந்து, லாத்வியா, போலந்து, பல்கேரியா, பெல்ஜியம், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மட்டும் வென்றுள்ளன. 10ஆவது நாளான வெள்ளியன்று மாலை நிலவரப்படி 21 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம்பெற்று இருந்தன. 2 பிரிவுகளில் களமிறங்கியுள்ள இந்தியா இன்னும் பதக்கப்பட்டியலில் இடம்பெற றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்கால ஒலிம்பிக் - 2026 பதக்கப் பட்டியல் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1. நார்வே 7 2 5 14 2. இத்தாலி 6 3 8 17 3. அமெரிக்கா 4 7 3 14 4. ஜெர்மனி 4 3 2 9 5. சுவீடன் 4 3 1 8