பார்வையற்றோர் சுதந்திரமாக வாக்களிக்க ஆடியோ வசதியுடன் கூடிய 'விவிபேட்' தேவை: தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை
11 Apr 2026, 5:30 am

பார்வையற்றோர் சுதந்திரமாக வாக்களிக்க ஆடியோ வசதியுடன் கூடிய 'விவிபேட்' தேவை: தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை

சென்னை, ஏப்.10- பார்வையற்ற வாக்காளர்கள் யாருடைய உதவியுமின்றி, ரகசியமான முறையில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய ஆடியோ வசதியுடன் கூடிய 'விவிபேட்' இயந்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என 'நேத்ரோதயா' அமைப்பு சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேட் கருவி, வாக்களித்ததை வெறும் காட்சிச் சீட்டு மூலம் மட்டுமே காட்சிப்படுத்துகிறது. இது பார்வையற்றவர்களுக்குப் பயன் தராததால், அவர்கள் மற்றொருவரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இது வாக்கின் ரகசியத்தையும் மற்றும் தனிமனித உரிமையையும் பாதிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தங்கம் விலை குறைந்தது. சென்னை, ஏப்.10 - தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில், வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்தது. ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.