அரசாணை எண்-5-ஐ அமல்படுத்தக் கோரி 4 மண்டலங்களில் ஏயுடி-மூட்டா தொடர் உள்ளிருப்புப் போராட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>அரசாணை எண்-5-ஐ அமல்படுத்தக் கோரி 4 மண்டலங்களில் ஏயுடி-மூட்டா தொடர் உள்ளிருப்புப் போராட்டம்</strong></p>
<p>மதுரை, பிப்.17- அரசாணை எண்-5-ஐ (உயர்கல் வித்துறை, 11.01.2021) முழுமை யாக அமல்படுத்தி, பணிமேம் பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஏயூடி-மூட்டா சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் உள்ளி ருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ.டி. செந்தா மரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யுஜிசி மற்றும் ஏழாவது ஊதி யக்குழு பரிந்துரைகளின்படி வெளி யிடப்பட்ட அரசாணை எண்-5, அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு உதவி பெறும் கல் லூரி ஆசிரியர்களுக்கு இது முழு மையாக வழங்கப்படாதது கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எட்டு மண்டலங்களில் கோவை மற்றும் தஞ்சாவூரில் பணிமேம்பாட்டு ஊதி யம் மட்டும் வழங்கப்பட்டு நிலு வைத் தொகை நிலுவையில் உள் ளது. சென்னை உள்ளிட்ட பிற மண்ட லங்களில் ஆணை வழங்கப்பட்டும் ஊதியமும் நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இணைப்பேராசிரியர் பணி மேம்பாட்டு பலன்கள் தடையால், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் முனை வர் பட்ட (Ph.D) ஆய்வில் சேரும் வாய்ப்பை இழந்துள்ளனர். கடந்த பிப்.2-ஆம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் அளித்த வாக்கு றுதியும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. ஐந்து ஆண்டுகளாக மனுக்கள் மற்றும் ஜனநாயகப் போராட்டங் கள் நடத்தியும் தீர்வு கிடைக்காத தால், பிப். 16 முதல் சென்னை, திரு நெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நான்கு மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்கு நர் அலுவலகங்களில் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் தொடங் கப்பட்டுள்ளது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் வலியு றுத்தியுள்ளார். மதுரை மண்டலப் போராட்டத் தில் மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா, துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, பொதுச்செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மண்ட லப் பொறுப்பாளர்கள் ரமேஷ் ராஜ், வில்சன் பாஸ்கர், இராபர்ட் திலீபன், பிரபாகரன், தேவகி, ஞானேஸ்வரன், மைதிலி, சுப்பு ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள னர்.</p>
