தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

19 Feb 2026, 3:09 pm
திருச்சி விரைவு செய்திகள்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா பிப்.23இல் துவங்குகிறது

நாகர்கோவில்.பிப்.19 ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் திருவிழா 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 23, திங்கட்கிழமை அன்று தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 5:30 மணிக்கு காப்பு கட்டி குடியிருத்தல் சடங்கு நடைபெறும். உலக புகழ்பெற்ற ஆற்றுகால் பொங்கல் விழா மார்ச் 3, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது. காலை 9:45 மணிக்கு பண்டார அடுப்பில் தீ ஏற்றப்படும். பிற்பகல் 2:15 மணிக்கு பொங்கல் நிவேத்யம் நடைபெறும். இரவில் அம்மனின் திருவீதி உலா முடிந்த பின்,  மார்ச் 4, புதன்கிழமை அதி காலை 12:45 மணிக்கு குருதி தர்ப்பணம் சடங்குடன் திருவிழா நிறைவடையும். என செய்தியாளர்களுக்கு கோவில் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை  பயிற்சி

நாகர்கோவில்.பிப்.19 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு  வசதி  மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு  திறன் அடிப்படையிலான  பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.   இதன்  அடிப்படையில்  தற்போது  ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி  வழங்கப்படவுள்ளது.  இப்பயிற்சியில் சேர  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினரை சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு  வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்ளும்  இருக்க வேண்டும்.  18  முதல் 35 வயது  வரை உள்ளவர்கள்,, பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப் பயிற்சிக்கான  கால  அளவு  மூன்று  மாதங்கள் ஆகும்.   இப்பயிற்சியில் விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்புத் திறன்,ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடை முறைகள் மற்றும் கேபின் குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடித்த  இளைஞர்க ளுக்கு  சான்றிதழ்  மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பிற்கு வழிவகை  செய்யப்படும். இப்பயிற்சி யினை  பெற தாட்கோ இணையதளமான (www.tahdco. com)  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும்  திருப்பூரில் உள்ள  விடுதியில்  தங்கி  படிக்கும்  வசதி  மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக  வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர்.அழகுமீனா  தெரிவித்துள்ளார்.

பிப்.23இல் முன்னாள் படை வீரர்  சிறப்பு குறைதீர் கூட்டம்

நாகர்கோவில். பிப்.19 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப் 23 அன்று சரியாக காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில்  நடைபெற உள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்க ளைச் சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர் கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண் ணப்பமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவரி டம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

நாகர்கோவில்.பிப்.19 தமிழகத்தில் பிப் 21ஆம் தேதி கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

பேச்சிப்பாறை பழங்குடி மக்களின் நீண்ட கால  கோரிக்கையான மின் இணைப்பு வழங்க அனுமதி

அருமனை, பிப்.19 கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பா றை ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வசிக்கின்ற பழங்குடி மலைவாழ் கிராம மக்களின்  50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.  பேச்சிப்பாறை ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியாக இருப்பதாலும் ,பல்லுயிர் சரணாலயம் என்பதாலும் அப்பகுதி மக்களு க்கு மின் இணைப்பு வழங்குவதில் தடங்கல் இருந்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரத்திற்கு பின் முதல்முறை யாக மலை கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அப்போதய துணை முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தொடர்ச்சி யாக பல இடங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் மின் இணைப்புக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத ஒரு சூழ்நிலை இருந்து வந்தது.  இந்நிலையில் தற்போது களப்பாறை, தின்னமூட்டு தேரி போன்ற பகுதிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு மின் இணைப்பு வழங்க முதல் முறையாக கிராமசபா  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதை அடுத்து  வனத்துறை அதிகாரி கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  அப்போது மரங்கள் மற்றும் விலங்குகளு க்கு பாதிப்பு இல்லை என்று கண்டறியப் பட்டு 51 வீடுகளுக்கு மலைவாழ்குடியி ருப்புக்கு மின் இணைப்பு வழங்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் களப்பாரை, தின்ன மூட்டு, தேரி மக்களுக்கு முதல்முறையாக மின்சா ரம் கிடைப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களின் நீண்ட கால போராட்டத்திற்கு விடிவு வந்தது என மகிழ்ந்தனர்.

களியக்காவிளை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு சிபிஎம் உறுப்பினர் உள்பட 10 பேர் ஆட்சியரிடம் மனு

குழித்துறை, பிப். 19- களியக்காவிளை பேரூ ராட்சியில் மாதந்தோறும் மன்ற கூட்டம் நடத்தாமல் காலம் தாழ்த்திவரும் பேரூ ராட்சித் தலைவரால் பேரூ ராட்சியில் வளர்ச்சிப் பணி கள் மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள் ளது. இப் பிரச்னைக்கு தீர்வு  காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களியக்காவிளை பேரூ ராட்சி உறுப்பினரும், கட்சி யின் களியக்காவிளை - பளு கல் வட்டாரக்குழு  உறுப்பின ருமான ஏ. வின்சென்ட் தலை மையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஏ.வின்சென்ட் தலைமை யில் பேரூராட்சி துணைத் தலைவர் த. பென்னட்ராஜ்,  வார்டு உறுப்பினர்கள் நிஷா, குணசீலன், எம். பாபு, டெல்பின் ஜமீலா, எஸ். சுனிதா, டி. உமா மகேஸ்வரி, எஸ். விஜயகுமாரி மற்றும் நியமன உறுப்பினர் கே. கதி ரேஷ் உள்ளிட்ட 10 உறுப்பி னர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்தி ருப்பதாவது: இப் பேரூராட்சியில் துணைத் தலைவர் மற்றும் பெரும்பான்மை உறுப்பினர் கள் கொடுக்கும்  தீர்மானங்க ளை மன்ற தலைவர் கூட்ட பொருளில் கொண்டு வரா மல் புறக்கணிப்பு செய்து வருவதுடன் மாதந்தோறும் மன்ற கூட்டமும் நடத்தாமல் செயல்பட்டு வருகிறார். மேலும் ஒற்றாமரம் பகுதி யில் செயல்பட்டு வரும் பேரூராட்சிக்கு சொந்தமான வாகன எடை மேடை மாதந் தோறும் பேரூராட்சிக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இழப்பை சரிசெய்ய எடை மேடையை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கவும், பேரூராட்சி துணைத் தலை வர் தலைமையில் மன்ற கூட்டம் நடத்தவும், மன்ற தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு: எஸ்பி திடீர் ஆய்வு

தூத்துக்குடி, பிப்.19 – 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடை பெற்று வரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டம் முழுவ தும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த எஸ்பி உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டத்தின் பிற மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. சோதனையின் போது வாகனங்களின் விவரங்கள் முறையாகப் பதிவேட்டில் குறிக்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மாவட்டத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து வாகனங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிலையில் புதனன்று செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில்  கண்காணிப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்  நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது, ஸ்ரீவைகுண் டம் டிஎஸ்பி நிரேஷ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்  ஜுன்குமார் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

தென்காசி மாவட்டத்தில், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

தென்காசி, பிப். 19- வைட்டமின்-ஏ குறைபாட்டினால் ஏற்படும் பார்வை குறை பாடு, வயிற்றுப் போக்கு, தீவிர சுவாச தொற்று மற்றும் பள்ளி  முன்பருவ குழந்தைகளிடையே (3-5 வயது) ஏற்படும் இறப்பதை தவிர்க்கும் பொருட்டும் வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டம் முழுவதும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் பிப்ரவரி மாதம் 23 முதல் 28 வரை (புதன் நீங்கலாக) நடைபெறும். வைட்டமின்-ஏ திரவம், 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான சுமார் 88,690 குழந்தைகளு க்கு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின்-ஏ திரவமானது 6 மாதம் முதல் 11 மாதம் வரை யுள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி. என்ற அளவிலும், 12 மாதம் முதல் 60 மாதம் வரை குழந்தைகளுக்கு 2 மி.லி. என்ற அள விலும், அங்கன்வாடி மற்றும் துணை சுகாதார நிலையங்க ளில் வழங்கப்படவுள்ளது.எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன் வாடி மையங்களுக்கு தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைக ளை அழைத்துச் சென்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

வி.கே.புரத்தில் 14 பேரை கடித்து குதறிய தெரு நாய்

திருநெல்வேலி, பிப்.19- நெல்லை மாவட்டம் வி. கே.புரம் நகராட்சியின் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று ஏராளமா னோரை கடித்து குதறிய சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே. நேரத்தில் தெரு நாய்கள் வி.கே.புரம் நகர் பகுதிகளில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் இடங்களிலும், தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக திரிவது மட்டுமல்லாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி சென்று கடித்து வருகின்றன. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் எந்தவித நட வடிக்கை யும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெருநாய் ஒன்று வெறித்தனமாக சுற்றித் திரிந்து 14 பேரை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யா கோவில் தெரு, பழைய போலீஸ் நிலையம் பகுதி களில் நடந்த இந்த சம்பவத்தில் 3 சிறு வர்கள் உட்பட மொத்தம் 14 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜெசிந்தா, பிரேமா தனுசு வேல், பாலமதி,தீரான், மதன்குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அம்பாசமுத்திரம் அரசு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் லேசான காயங்களுடன் முதலுதவி பெற்றுள்ளனர். அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து தெரு நாய் கடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தெரு நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரி களிடம்  வலியுறுத்தியுள்ளனர்.

விவசாய நகைக்கடனில் கட்டாய இன்சூரன்ஸ் ஐஓபி வங்கிக்கு எதிராக விவசாயிகள் சங்கம் புகார்

தூத்துக்குடி, பிப்.19– தூத்துக்குடி மாவட்டத் தில் இந்தியன் ஓவர்சீஸ்  வங்கி (IOB) கிளைகளில் விவசாய நகைக்கடன் வழங்கும் போது, விவசா யிகளிடம் கட்டாயமாக இன்சூரன்ஸ் / விபத்து காப்பீ ட்டு பாலிசிகள் இணைத்து ரூ.800 முதல் ரூ.3000 வரை பிடித்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செய லாளர் பா.புவி ராஜ், மாவட்ட தலைவர் ராகவன் ஆட்சியர்  அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். அந்த மனுவில், ஆயி ரக்கணக்கான விவசாயிகள் ஐஓபி வங்கியின் வாடிக்கை யாளர்களாக இருந்து வருவ தாகவும், நகைக்கடன் பெறும் போது வங்கி அதி காரிகள் இன்சூரன்ஸ் பாலிசிகளை கட்டா யப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நகைக்கடன் பெற இன்சூரன்ஸ் அவசியம் என அரசு அல்லது ரிசர்வ்  வங்கி இதுவரை எந்த உத்த ரவும் பிறப்பிக்கவில்லை என்றும், இலக்குகளை (Target) நிறைவேற்றும் நோக்கில் வங்கி அதிகாரிகள் விவசாயிகளை அழுத்தம் கொடுத்து பாலிசிகளை வாங்க வற்புறுத்துகின்றனர் என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே பொருளா தார சிரமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இது கூடுதல் நிதிச்சுமையாக மாறியுள்ளது. விவசாயி களின் சேமிப்பு கணக்கு களில் இருந்து அவர்களின் சம்மதமின்றி தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ள தாகவும், இதனை ஆய்வு செய்தால் உண்மை வெளி வரும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கட்டாய இன் சூரன்ஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்தி, பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை சம்பந்தப் பட்ட விவசாயிகளின் கணக்குகளில் மீண்டும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசா யிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய விதிமீறல்கள் நடைபெறாத வகையில் வங்கி அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டு தல்கள் வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத் தப்பட்டுள்ளது.

சிலிண்டர் வெடித்து தாய் பலியான வழக்கு மகனுக்கு ரூ.23 லட்சம் நஷ்டஈடு  நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

திருநெல்வேலி, பிப்.19- விகேபுரத்தில் கேஸ் சிலிண் டர் வெடித்து தாய் பலியான வழக்கில், பாதிக்கப்பட்ட மகனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.23 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்க புரம் வம்ப ளந்தான்பாறை தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சண்முகம் (52). கடந்த 2017 செப்டம் பர் 21ஆம் தேதி சண்முகம் வீட்டில் சமையல் செய்து  கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் தானாக கழன்று கீழே விழுந்தது. இதனால் சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது. அதே நேரத்தில் மின்சார வாரியத்தின் மின் பகிர்மானத்தில் அதிக மின் அழுத்தம் உண்டானது. இதனால் மின் சுவிட்சில் இருந்து கிளம்பிய தீப்பொறி, கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்ததால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து தரைமட்டமானது. விபத்தில் படு காயம் அடைந்த சண்முகம் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது தாயின் மரணத்திற்கும், வீடு இடிந்ததற்கும் கேஸ் நிறுவனம், அதன் விநியோகஸ்தர் மற்றும் மின்வாரியத்தின் சேவை குறைபாடே காரணம் என சண்முகத்தின் மகன் கார்த்திக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர், வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை மாவட்ட கூடுதல் நுகர்வோர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கை மாவட்ட கூடுதல் நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் விசாரித்தனர். அப்போது கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்த நிறுவ னம் மற்றும் மின்வாரியம் தரப்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஆணை யம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்ந்த 2019ம் ஆண்டு முதல் 9 சதவிகித வட்டியையும் சேர்த்து வழங்கவும் ஆணையிட்டது. அதனுடன் வழக்கு செல வுக்காக ரூ.10 ஆயிரமும் சேர்த்து வட்டியு டன் மொத்தம் ரூ.23,89,165யை 45 நாட்க ளுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.