கவனம் ஈர்க்கும் வாக்காளர் விழிப்புணர்வு இலட்சினைகள்
26 Mar 2026, 2:46 pm

கவனம் ஈர்க்கும் வாக்காளர் விழிப்புணர்வு இலட்சினைகள்

கோவை, மார்ச் 26-

அனைத்து ஆவணங்களை காட்டியும் மீன் வியாபாரியிடம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உணவின்றி வாகனத்திற்கு டீசல் இன்றி பொள்ளாச்சியில் தவித்த வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ராமன் மற்றும் அவரது நண்பர் இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், புதனன்று இரவு மீன் வியாபாரத்திற்காக 80 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்து, மீன்களை கொள்முதல் செய்து வேளாங்கண்ணியில் இருந்து கேரளாவில் சாவக்காடு மற்றும் குன்னங்குளம் ஆகிய பகுதிகளில் மீன்களை விற்றுவிட்டு விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் வியாபாரத்திற்காக நகைகளை அடகு வைத்த ரசீது மற்றும் மீன்களை விற்பனை செய்த 70 ஆயிரம் ரூபாயுடன் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது வியாபாரிகளை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கேட்ட பொழுது, மீன் வியாபாரம் செய்து வந்த பணம் 7 ஆயிரம் உள்ளதாகவும், அதற்கு உண்டான ரசீதுகள் உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் ஒருமையில் பேசியதோடு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் வியாபாரிகளிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராமன் கூறுகையில், தற்போது நள்ளிரவில் உணவு மற்றும் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகனத்திற்கு டீசல் இல்லாமலும் நடுவழியில் தவித்து வருவதாகவும், தேர்தல் அதிகாரிகள் இது போன்ற சிறு வியாபாரிகளிடம் முறையாக சோதனை செய்து ஆவணங்களை காட்டினால் விட ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தகுந்த தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.