பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
10 Jan 2026, 2:48 pm
<p><strong>பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>பெரம்பலூர், ஜன.10- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காடூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு, கிளை நிர்வாகி படகாத்து தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் செல்லதுரை வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைவர் கே. முகமது அலி கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தியும், ஊக்கத்தொகை ரூ.5 உயர்த்தியும், மாட்டு தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கிடக் கோரியும், பாலை சத்துணவு திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்டச் செயலாளர் முத்து, மாவட்டக் குழு உறுப்பினர் சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோபி நன்றி தெரிவித்தார். திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் குமார் தலைமை வகித்தார். கணேசன், கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ராமநாதன், மாவட்ட தலைவர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் சங்கிலிதுரை ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர்.</p>
