புதுக்கோட்டை அண்ணா நகரில் ஏழைகளின் வீட்டை அபகரிக்க முயற்சி
12 Nov 2025, 3:20 pm
<p><strong>புதுக்கோட்டை அண்ணா நகரில் ஏழைகளின் வீட்டை அபகரிக்க முயற்சி''</strong></p>
<p>புதுக்கோட்டை, நவ.12 - புதுக்கோட்டை அண்ணா நகரில் வசித்து வரும் ஏழைகளின் வீடுகளை அப்புறப்படுத்தத் துடிக்கும் நில அப கரிப்பாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் புதுத் தெரு வில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசுப் புறம்போக்கில் வசித்து வரு கின்றன. கல் உடைக்கும் தொழிலாளி களான இவர்கள் காலம் காலமாக அப்பகுதியில் வசித்து வந்ததன் அடிப்ப டையில் அவர்களுக்கு 10 ஆண்டு களுக்கு முன்பாக அரசால் பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு வீட்டு வரி, மின்சாரம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களின் வீடு களை எந்தவித ஆவணங்களும் இல்லா மல், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியாமல் சிலர் மேற்படி வீடுகளை அபகரிக்கத் துடிக்கின்றனர். அடி ஆட்களை வைத்து மிரட்டியும், இவர் களின் வீட்டை சுற்றி வேலிக் கற்களை ஊன்றியும், மலையடிப் பள்ளங்களில் மண்ணைக் கொட்டி நிரப்பியும் வரு கின்றனர். இதனைத் தொடர்ந்து மேற்படி பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கவிவர்மன், சு.மதியழகன், கி.ஜெயபாலன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் சந்தித்து விபரங் களைக் கேட்டறிந்தனர். இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தெரிவிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டம் முழுவதும் ஏழை மக்கள் வசித்து வரும் வீடுகளை ரியல் எஸ்டேட் கும்பல் அபகரித்து வருகிறது. இதற்கு வருவாய்த் துறை அதிகாரி களும், காவல்துறையினரும் உடந்தை யாக இருந்து வருகின்றனர். அதே போலத் தான் புதுக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்களையும் அதிகாரிகளின் துணையோடு சிலர் அப கரிக்கத் துடிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேற் படி நில அபகரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அண்ணாநகர் பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டும். அரசால் வழங்கப்பட்ட பட்டாக்களை இணையத்தில் ஏற்று வதற்கும், வருவாய்த்துறை கணக்கில் போக்குவரத்து செலவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.</p>
<p> </p>
