தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீட்டை அபகரிக்க முயற்சி: தனியார் நிதி நிறுவனத்தினர் அராஜகம்

8 Feb 2026, 3:55 pm
வீட்டை அபகரிக்க முயற்சி: தனியார் நிதி நிறுவனத்தினர் அராஜகம்
<p><strong>வீட்டை அபகரிக்க முயற்சி: தனியார் நிதி நிறுவனத்தினர் அராஜகம்</strong></p> <p>கோவை, பிப்.8- கடன் தொகைக்காக ரூ.2.25 கோடி &nbsp;மதிப்புள்ள வீட்டை அபகரிக்கும் நோக் கில், தனியார் நிதி நிறுவனத்தினர் அடி யாட்களுடன் புகுந்து கதவை உடைத்து &nbsp;அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த ஜி.என்.மில் பகுதியில் உள்ள சூரிய லட்சுமி கார்டனில் வசித்து வரு பவர் பத்மநாபன். இவர் தனக்கு சொந்த மான இரண்டு அடுக்குமாடி வீட்டை &nbsp;அடமானம் வைத்து, சாய்பாபா கால னியைச் சேர்ந்த சந்திரசேகர் என்ப வரது தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடனை வங்கி மூலம் &nbsp;ரூ.35 லட்சமும், ரொக்கமாக ரூ.9.50 லட் சமும் என மொத்தம் ரூ.44.50 லட்சம் &nbsp;ரூபாய் பெற்றுள்ளார். ஒன்றரை கோடி &nbsp;ரூபாய் வரை கடன் தருவதாகக் கூறி, நிதி &nbsp;நிறுவனம் தரப்பில் ஆசை வார்த்தை &nbsp;காட்டப்பட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில், கடந்த டிச.13 ஆம் தேதி யன்று சுமார் 25 பேர் கொண்ட அடியாட் கள் கும்பல், பத்மநாபனின் வீட்டின் &nbsp;கதவை அதிரடியாக உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அராஜகத் தில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்த முதிய வர்களை கீழே தள்ளிவிட்டு, பொருட் களை அப்புறப்படுத்திய அந்த கும்பல், &nbsp;&lsquo;இனி இந்த வீடு எங்களுக்கே சொந்தம்&rsquo; &nbsp;என மிரட்டல் விடுத்துள்ளது. முறையாகப் பத்திரப்பதிவு செய் திருப்பதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்தைத் தட்டிப் பறிக்க நிதி நிறுவனம் முயன்றது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப் பட்ட பத்மநாபன், தனது வாழ்நாள் சேமிப்பான 2.25 கோடி ரூபாய் சொத்தைப் பறிக்க முயலும் கும்பல் மீது &nbsp;நடவடிக்கை கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் விரிவான புகார ளித்துள்ளார். நிதி நிறுவன அடியாட் கள் வீட்டின் கதவை உடைக்கும் செல் போன் வீடியோ காட்சிகள் தற்போது &nbsp;வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.