தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தரம் குறைந்த மதுபானங்களை திணிக்க முயற்சி! சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் எச்சரிக்கை

6 Jan 2026, 4:23 pm
தரம் குறைந்த மதுபானங்களை திணிக்க முயற்சி! சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் எச்சரிக்கை
<p><strong>தரம் குறைந்த மதுபானங்களை திணிக்க முயற்சி! சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் எச்சரிக்கை</strong></p> <p>கோவை, ஜன. 6- மற்ற மாவட்டங்களில் ஸ்கேன் செய்ய முடியாமல் தேங்கிப் போன, கடந்த &nbsp;ஆறு மாதங்களாக கடைக ளில் தேங்கியிருந்த சரக்கு கள் மீண்டும் விற்ப னைக்கு அனுப்பப்பட உள் ளன. இது நுகர்வோரின் உடல் நலத்திற்கு தீங்கு &nbsp;விளைவிக்கும் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங் கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட டாஸ் மாக் ஊழியர் சங்கம். டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், முதுநிலை மண் டல மேலாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, டாஸ்மாக் நிர்வாகம் என்ட் டூ என்ட் &nbsp;கணினிமயமாக்கல் திட்டம் நடைமுறைப் படுத்தியுள்ளது. இதன் பின்னனியில், சுமார் &nbsp;16 கோடி ரூபாடய மதிப்பிலான இந்த பழைய &nbsp;மதுவகைகளை மீண்டும் கோவை கடைக ளுக்கு அனுப்ப நிர்வாகம் திட்டமிட்டுள்ள தாகத் தெரிகிறது. இந்த மது வகைகள் &nbsp;நீண்ட நாட்கள் தேங்கியிருந்ததால் நிறம் மாறி, தரம் குறைந்து நுகர்வதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. இவற்றை விற்பனை செய்தால் வாடிக்கை யாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இச் சரக்குகளால் பொதுமக்களின் உடல்நலம் &nbsp;பாதிக்கப்பட்டால் அது அரசுக்கும் டாஸ் மாக் நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்ப டுத்தும். எனவே, இந்த பழைய சரக்கு களை கோவை சில்லறை விற்பனை கடை களுக்கு அனுப்புவதை கைவிடுமாறு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp; இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் ஒரு வர் கூறுகையில், நீண்ட நாட்களாக கிடங்கு களில் தேங்கிக் கிடந்த இந்த மதுபானங் கள், முறையான பராமரிப்பின்றி தற்போது &nbsp;நிறம் மாறி, தரம் குறைந்து, நுகர்வதற்கு தகு தியற்ற நிலையில் உள்ளதாக கூறப்படு கிறது. ஒரு மதுபானம் அதன் வேதியியல் தன்மையை இழக்கும்போது, அது விஷமாக மாற வாய்ப்புள்ளது. தரம் குறைந்த இந்த மதுபானங்களை கடைகளில் விற்பனை செய்யும்போது, நுகர்வோர்களுக்கும் விற் பனையாளர்களுக்கும் இடையே கடும் &nbsp;மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே &nbsp;பணிச்சுமையில் உள்ள ஊழியர்கள், நிர்வா கத்தின் தவறான முடிவால் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். &ldquo;பழைய மதுவை விற்று பணமாக்குவதை விட, மக்க ளின் உயிர் மேலானது.&rdquo; எனவே, இந்த &nbsp;16 கோடி ரூபாய் மதிப்பிலான தரம் குறைந்த &nbsp;மதுபானங்களை கடைகளுக்கு அனுப்பும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் உடனடி யாகக் கைவிட வேண்டும் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.