பழங்குடியின மக்களை நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சி!
24 Nov 2025, 5:22 pm
<p><strong>பழங்குடியின மக்களை நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சி!</strong></p>
<p>நாமக்கல், நவ.24- கொல்லிமலை வட்டம் தேவ னூர் நாடு சூழவந்திப்பட்டி கிராமத் தில் பழங்குடியின மக்களின் அனு பவ நிலத்திலிருந்து வனத்துறையி னர் வெளியேற்ற முயற்சிப்பதை கண்டித்தும், அனுபவ நிலங்க ளுக்கு பட்டா வழங்க கேட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை வட்டம் தேவனூர் நாடு சூழ வந்திப்பட்டி கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறைகளாக வனம் சார்ந்த நிலங்களில் வரகு, சாமை, திணை உள்ளிட்ட சிறு தானியங்களை காய் கனி உள்ளிட்டவற்றை பயிரிட்டு தங்கள் பொருளாதார ஆதாரமாகக் கொண்டுள்ளனர். தற்பொழுது மழை காலம் என்பதால் நிலத்தை தூய்மை செய்து சிறு தானியங்கள் பயிரிடவும், சில்வர் ஓக் மரம் நடும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் நிலங்கள் வனத் துறைக்கு சொந்தமானது என்றும் நீங்கள் இதில் அனுபவம் செய்யக் கூடாது என்றும், வனத்துறையினர் தடுத்ததோடு பழங்குடியின மக்கள் நடவு செய்த சில்வர் ஓக் மரக்கன்று களை பிடுங்கி எரிந்து அராஜகத் தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நிலத்தில் விவசாயி கள் அமைத்திருந்த சிறு கொட்டகை உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி வனத்துறையினர் அராஜ கத்தில் ஈடுபட்டனர். 2018 ஆம் ஆண்டு இந்த நிலம் எங்களுக்கு சேர்ந்து விட்டது என்று கூறி அந் நிலத்தில் பயிரிட்ட மக்களில் பல ருக்கு பொய் வழக்கு போட்டு அப ராத கட்டணம் அராஜகமாக வசூ லித்துள்ளனர். இச்சூழலில் 2006-வன உரி மைச் சட்டப்படி முறைப்படி கிராம சபை கூட்டம் மற்றும் கிராம வன உரி மை குழு தேர்ந்தெடுக்கப்பட்டு அவற் றில் வன நில உரிமை பட்டா வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். மேற்படி நிலத் தை நீங்கள் அனுபவம் செய் தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று வனத்துறையி னர் மிரட்டி வருகின்றனர். எனவே இப்பிரச்சனையில் மாவட்ட வனக்குழு தலைவரான மாவட்ட ஆட்சியர் உடனடி தலை யீடு செய்து வனத்துறையின் அத்து மீறல்களை தடுத்து நிறுத்தி, பழங் குடியின மக்களின் அனுபவ நிலங்க ளுக்கு 2006-வன உரிமை சட்டப்படி அனுபவ பட்டா வழங்க உரிய நடவ டிக்கை வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் சுமார் 70 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லி மலை தாலுகா செயலாளர் எஸ்.தங்கராஜ் தலைமை வகித்தார். தாலுகா உறுப்பினர் சி.ரேவதி, மூத்த தலைவர் கே.வி.ராஜ், தமிழ் நாடு காபி விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.ரங்க சாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலுக்கா செயலாளர் வி.சி.பழ னிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறையின் அரா ஜகங்களை விளக்கி கொல்லிமலை தேவனூர் நாடு சூழவந்திப்பட்டி கிராம வன உரிமை குழு தலைவர் ஜெயம் செயலாளர் பாலகிருஷ் ணன், பொருளாளர் கனகு துரை ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் மாவட்ட குழு உறுப்பினர் கே.சின்னசாமி, எஸ்.கே.மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. டி.கண்ணன் தலைமையில் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனு வை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வின் போது சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.தங்க ராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கே.மாணிக்கம், கிராம உரிமை குழு தலைவர் ஜெயம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
