முந்தய பக்கம்

கோவில் நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்ற முயற்சி

17 Nov 2025, 4:40 pm
கோவில் நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்ற முயற்சி
<p><strong>கோவில் நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்ற முயற்சி</strong></p> <p>தருமபுரி, நவ.17- பென்னாகரம் அருகே, கோவில் நிலத்தில் விவசா யம் செய்து வருவோரை வெளியேற்றும் முயற்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, திங்களன்று தரும புரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பளிஞ்சிரஹள்ளி ஊராட்சியில் திம்மராய சுவாமி மற்றும் நரசிம்ம சுவாமி &nbsp;கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங் களை அப்பகுதி மக்கள் காலங்காலமாக பராமரித்து, விவசாயம் செய்து வருகின்றனர். அதில் வரும் வரு வாயை கொண்டு கோவிலில் திருவிழாக்கள் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், கோவிலுக்கு சம்மந்தம் இல் லாத நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை வெளி யேற்றி, கோவில் கமிட்டியிடம் நிலத்தை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டது. ஆனால், இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமான நிலம் என குறிப்பிடவில்லை. இந் நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை இந்து &nbsp;சமய அறநிலைத்துறை மூலம், குத்தகைக்கு விட முடிவு &nbsp;செய்து, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவானது நீண்ட காலம் விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும். எனவே, இம்முடிவை கைவிட வேண்டும் &nbsp;என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram