மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கருவிலேயே மரபணு நோய் கண்டறியும் முயற்சி வெற்றி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கருவிலேயே மரபணு நோய் கண்டறியும் முயற்சி வெற்றி</strong></p>
<p>மதுரை, மார்ச் 26- மதுரை அரசு இராசாசி மருத்து வமனையில், கர்ப்பத்தின் ஆரம்ப கட்டமான நான்கு மாத காலத்தி லேயே பனிக்குடநீர் ஆய்வு மூலம் கருவில் மரபணு நோய்கள் இருப்ப தற்கான சாத்தியக் கூறுகளை கண்டறியும் அரிய முயற்சி வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டுள் ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் தெரிவித்ததாவது: பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது, பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு வியாதிகளில் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கர்ப் பத்தின் 16 முதல் 20 வாரங்களுக் குள் பனிக்குடநீர் ஆய்வு மூலம் குழந்தைக்கு நோய் இருப்பதற் கான சாத்தியக்கூறுகளை துல்லி யமாக அறிய முடியும். கடந்த 24.10.2025 அன்று தாய் சேய் நலப்பிரிவு, கதிரியக்கத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை இணைந்து மேற்கொண்ட சிகிச்சை முயற்சியில், ஏற்கனவே “தசைநார் சிதைவு” என்ற மரபணு நோயால் ஒரு குழந்தையை இழந்த அனிதா என்ற கர்ப்பிணிப் பெண் ணுக்கு, கருவுற்ற 18 ஆவது வாரத்தி லேயே பனிக்குடநீர் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் கருவிற் குள் இந்நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்தப் பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றுள்ளார். தமிழ்நாடு மற்றும் தேசிய சுகா தாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை அரசு ராசாசி மருத்துவ மனையில் மரபணு ரத்த நோய் களுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் களுக்கு பனிக்குடநீர் ஆய்வு தொட ர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவையுடன் வாழ வேண் டிய நிலை, குடும்ப மற்றும் அரசின் பொருளாதார சுமை ஆகிய வற்றை குறைக்க முடியும். இத்தகைய பரிசோதனைகள் பொதுவாக சில தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே மேற்கொள் ளப்படும் நிலையில், அரசு மருத்து வமனையில் வழங்கப்படுவது சுற்றுவட்டார மக்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தாய்சேய் நலப்பிரிவு தலைவர் வளர்மதி, உதவிப் பேராசிரியர்கள் ஸ்வாதி, அனிதா, குழந்தைகள் நலத்துறை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் நந்தினி குப்புசாமி, உதவிப் பேராசிரியர்கள் விஜய் பிரபு, செந்தில்குமார், கதிரியக்கத் துறை தலைவர் சுமதி, உதவிப் பேராசிரியர்கள் ராகவி, நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
