தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளின் நிலப்பட்டாவை ரத்து செய்ய முயற்சி

14 Nov 2025, 1:26 pm
விவசாயிகளின் நிலப்பட்டாவை ரத்து செய்ய முயற்சி
<p><strong>விவசாயிகளின் நிலப்பட்டாவை ரத்து செய்ய முயற்சி</strong></p> <p>விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம்</p> <p>தருமபுரி, நவ.14- தளவாய் அள்ளி கிராமத்தில் விவசாயிகளின் நிலப்பட்டாவை ரத்து செய்ய முயற்சிக்கும் வரு வாய்த்துறையினரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், தளவாய்அள்ளி, &nbsp;நேரு நகர் விவசாயிகளின் நிலப் பட்டாவை ரத்து செய்ய முயற் சிப்பதை வருவாய்த்துறையினர் கைவிட வேண்டும். பொது சுடுகாடு கோரிக்கை என்ற பெயரால் விவ சாயிகளின் நிலத்தை பறித்து தனி நபர் சட்டவிரோத கனிம வியாபா ரத்துக்கு பயன்படுத்த முயற்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா நிலத்தில் அத்து மீறி நுழைந்தவர்களை, தட்டி கேட்ட &nbsp;விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கில் வன் முறை கும்பலை கைது செய்ய வேண் டும். விவசாயிகளின் குடிநீர், சாலை &nbsp;வசதி, தானியகள பயன்பாடு, பால் கொள்முதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து, சமூக விலக்கம் &nbsp;செய்து வைத்துள்ள கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க கிளைத் தலைவர் ஜி.பெரு மாள் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் சோ.அருச்சுனன், மாவட்ட துணைத்தலைவர் கே.என். மல்லையன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். சின்னசாமி, ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், ஒன்றியச் செய லாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், பகு திக்குழு செயலாளர் சி.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.எல் லப்பன் உட்பட பலர் கலந்து கொண் டனர். விஜய் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், வட் டாட்சியர் அலுவலகத்தில் கோரிக் கைகள் அடங்கிய மனு வழங்கப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.