தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“அசாமில் உ.பி.,  பீகார் வாக்காளர்களை சேர்க்க முயற்சி”

20 Nov 2025, 3:46 pm
“அசாமில் உ.பி.,  பீகார் வாக்காளர்களை சேர்க்க முயற்சி”
<p><strong>&ldquo;அசாமில் உ.பி., &nbsp;பீகார் வாக்காளர்களை சேர்க்க முயற்சி&rdquo;</strong></p> <p>பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், மத்தி யப்பிரதேசம், குஜராத், ராஜஸ் தான், உத்தரப்பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவு கள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அடுத்தாண்டு தேர்தலை சந்திக்க உள்ள அசாம் மாநிலத்தில் மட்டும் &ldquo;எஸ்ஐஆருக்கு&rdquo; பதிலாக &ldquo;எஸ்ஆர் (சிறப்புத் திருத்தம்)&rdquo; மேற் கொள்ளப்படுகிறது. எஸ்ஆர் முறை யில், வாக்குச் சாவடி நிலைய அலுவலர் வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஏற்கெனவே நிரப்பப்பட்ட பதிவேட்டை சரிபார்க்கும் பணியை மட்டும் மேற் கொள்வார். எஸ்ஐஆர் போன்று இல்லை. இதனால் அசாம் மாநிலத்துக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு வழங்கப்பட்டது? என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த வர்களை அசாம் வாக்காளர் பட்டிய லில் சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார். மக்க ளவை எதிர்க்கட்சித் துணைத் தலைவ ரான கவுரவ் கோகோய் துப்ரியில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் மேலும் பேசுகை யில், &ldquo;அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜகவுக்கு சுமையாக &nbsp;மாறிவிட்டார். அதனால் உத்தரப்பிர தேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த மக்க ளின் பெயர்களை அசாமின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரமான முயற்சி கள் நடைபெற்று வருகின்றன. அரசி யல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அசாம் தேர்தலை சிதைக்கும் எந்த வெளி ஆட்க ளையும் அனுமதிக்கக் கூடாது. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகின்றது. நாம் ஆட்சி அமைத்து அசாம் மக்களின் உரி மைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப் போம்&rdquo; என அவர் &nbsp;தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.