தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி: கோழிக்கமுதி முகாமில் குட்டியானை சேர்ப்பு!

19 Jan 2026, 2:23 pm
தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி: கோழிக்கமுதி முகாமில் குட்டியானை சேர்ப்பு!
<p><strong>தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி: கோழிக்கமுதி முகாமில் குட்டியானை சேர்ப்பு!</strong></p> <p>கோவை, ஜன.19- மதுக்கரை வனப்பகுதியில் தாயை பிரிந்து நிலையில் மீட்கப்பட்ட 3 மாத யானை குட்டியை கோழிக்கமுதி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட எட்டிமடையை அடுத்த மட்டத்துக்காடு வனப்பகுதியில், &nbsp;கடந்த டிசம்பர் மாத இறுதியில் யானை சத்தமிடுவதாக, கால்நடை மேய்க்கும் விவசாயிகள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுக்கரை வனத்துறையினர் சென்று பார்த்த போது, தாயை இழந்த மூன்று மாத யானை &nbsp;குட்டி ஒன்று நின்றுள்ளது. இதையடுத்து வன ஊழியர்கள் மதுக்கரை வனச்சரக அதிகாரிக ளுக்கு தகவலளித்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், நல்ல உடல் &nbsp;நலத்துடன் இருந்த மூன்று மாத ஆண் யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்க்கும் பணி யில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பலமுறை முயன்றும் குட்டியை தாயுடன் சேர்க்க முடிய வில்லை. இதையடுத்து முதன்மை வன &nbsp;பாதுகாவலர் உத்தரவின் பேரில், மீட்கப்பட்ட ஆண் யானை குட்டியை பொள்ளாச்சி வனக் கோட்டம் கோழிக்கமுதி யானைகள் முகா மிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு &nbsp;குட்டியானை கால்நடை மருத்துவ குழு &nbsp;மற்றும் பராமரிப்பாளர்கள் மூலம் கண் காணிக்கப்பட்டு வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.