தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் பள்ளிவாசல்கள் மீது தொடர் தாக்குதல் சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்

28 Oct 2026, 9:34 pm
தமிழ்நாட்டில் பள்ளிவாசல்கள் மீது தொடர் தாக்குதல்  சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்

தமிழ்நாட்டில் பள்ளிவாசல்கள் மீது தொடர் தாக்குதல் சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டனம்

சென்னை, அக்.28 -தமிழ்நாட்டில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலுக்கு சிறுபான்மை மக்கள் நலக்கு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, மாநில பொதுச் செயலாளர் பி.செந்தில்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:கடந்த 14.10.2026 அன்று வடபழனி கங்கை அம்மன் கோவில் தெரு பள்ளிவாசலில் அதிகாலை 4 மணியளவில் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பு கேமரா ஹார்ட் டிஸ்க்களை முதலில் தாக்குகிறார். அங்குள்ள பொருட்களைஅடித்து நொறுக்கி சேதப்படுத்துகிறார். தான் ஆர்எஸ்எஸ் மற்றும் டிவிகே அமைப்பை சேர்ந்தவன் எனக் கூறுகிறார். காவல்துறை அவரை மனநோயாளி எனக் கூறுவதாகதகவல்கள் உள்ளன.

26.10.2026 அன்று கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் மசூதியின் பெயர் பலகையை தாக்கி, இமாமை தாக்க ஒரு நபர் முற்படுகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் என்று அவர் கூறுவதோடு, கோவில் அருகில் இருந்து கொண்டு அட்டூழியம் செய்கிறீர்கள் என்கிறார். எத்தனை பேரை நீங்கள் சாகடிக்கிறீர்கள் என வன்மமாக பேசுகிறார். தொடர்ந்து மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தும் பகுதிகளில் கோவில்களும்உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இத்தகைய தாக்குதலில் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கம் மற்றும் பின்புலம் உள்ளதா என்பதையும் சித்தாந்த தொடர்புகளையும் காவல்துறை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்படுகின்றனவா என்பதையும் விசாரணை மூலம் அறிய வேண்டும். சிறுபான்மைவழிபாட்டுத் தலங்கள் உரிய பாதுகாப்புடன் இருப்பதையும், சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 31.10.2026 (சனிக்கிழமை) அன்று கண்டன போராட்டம் நடைபெறும். இப் போராட்டத்தில் அனை

வரும் பங்கேற்று ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.