தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

30 Jan 2026, 5:56 pm
சென்னை விரைவு செய்திகள்

மனித உரிமை ஆணையத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை, ஜன. 30:  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தீக்குளித்த மாற்றுத்திற னாளி ஆல்பர்ட் (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகரைச் சேர்ந்த இவர், சென்னை வேளச்சேரியில் தற்காலிகமாகத் தங்கியிருந்தார். கடந்த வியாழக்கிழமை புகார் மனு அளிக்க வந்த ஆல்பர்ட், திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். 70 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை அதி காலை உயிரிழந்தார். முன்னதாக அவரிடம் நீதித்துறை நடுவர்  மரண வாக்குமூலம் பெற்றார். ஒரு பெண் அளித்த மோசடிப் புகாரால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணமா என அபிராம

புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு

சென்னை, ஜன. 30:  இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் கடந்த மூன்றாண்டுகளில் வேலைவாய்ப்புத் தேவை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சிஐஇஎல்நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. 2022-ல் 3,500 ஆக இருந்த பணியிடங்கள் தற்போது 7,000 ஆக உயர்ந்துள்ளன. இதில் ரேடார் அமைப்புகள், விண்வெளித் தொழில் நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்புத் துறைகள் 60 விழுக்காடு பங்களிப்பை வழங்குகின்றன. தொழில்நுட்ப நிபுணர்களுக்கான ஊதியம் 30% வரை  உயர்ந்துள்ளதோடு, போர் முறைகள் நவீனமாகி வருவ தால் உயர்திறன் கொண்ட நிபுணர்களுக்குத் தேவை அதிகரித் துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறுகையில், இத்துறை உலகத் தரத்தி லான வேலைவாய்ப்புகளை வழங்குவதால், வெளிநாடு களில் உள்ள இந்திய நிபுணர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்பு  உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். கடுமையான தொழில் நுட்பத் தேர்வுகள் மற்றும் பின்னணி சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், இத்துறை  நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதாகவும் ஆய்வில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க டியுஜே வலியுறுத்தல்

சென்னை,ஜன.30- கருர் குளித்தலை அருகே எம்.எல்.ஏ பழனியாண் டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் மீது 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் கொடூரமாகத் தாக்கு தல் நடத்தியுள்ளனர். ட்ரோன் மூலம் செய்தி சேகரித்தபோது ஆத்திர மடைந்த கும்பல், கேமரா மற்றும் செல்போன்களை உடைத்து அவர்களைக் கடத்திச் சென்றது. காவல்துறையினர் தலை யிட்டு அவர்களை மீட்ட நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்ப வத்தை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்   மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்த மன், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாகக் கைது செய்து கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.