ஓடும் ரயிலில் முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் இந்துத்துவா குண்டர்கள் வெறிச்செயல்
14 Feb 2026, 4:00 pm
<p><strong>ஓடும் ரயிலில் முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் இந்துத்துவா குண்டர்கள் வெறிச்செயல்</strong></p>
<p>ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி நோக்கிச் சென்ற “காக்கிநாடா - சீரடி எக்ஸ்பிரஸ்” ரயி லில், இம்ரான் என்ற முஸ்லிம் இளைஞர் நண்பரோடு பய ணித்தார். ரயில் தெலுங்கா னா மாநிலம் ஹபீஸ் பேட் அருகே சென்று கொண்டிருந்த போது 20க்கும் மேற்பட்ட இந்துத்துவா குண்டர்கள்,”நீ எப்படி ரயில் இருக்கையில் அமர்ந்து பயணிக்கலாம்” என்று கூறி, இம்ரான் மீது 20க்கும் மேற் பட்ட கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலின் போது, இம்ரானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர்கள் மற்றும் பயணிகள் மீதும் இந்துத்துவா குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பின் பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயிலி லேயே இம்ரானிடம் விசாரணை மேற் கொண்டனர். </p>
