நில அளவையர் மீது தாக்குதல்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்?
13 Aug 2026, 9:36 pm

நில அளவையர் மீது தாக்குதல்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்?

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி

சென்னை, ஆக. 13 -நில அளவையர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன், பொதுச்செயலாளர் வெ. சோமசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் அரசன்குளம் கிராமத்திற்கு ஆகஸ்ட் 10 அன்று நில அளவைக்காக சென்ற குறுவட்ட நில அளவையர் மகேஷ் உடன், அப்பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தகராறு செய்துள்ளார். லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி மகேஷை பலமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் கடும் காயமுற்ற அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார். 5 மாதங்களுக்கு முன்புதான் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை நடைபெற்று விடுப்பு முடிந்து மகேஷ் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கயத்தாறு காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகும் குற்றவாளிகள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும், நில அளவையர் மகேஷூக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.