தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடைக்காட்டூர் பட்டியலின மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்து தாக்குதல்!

5 Mar 2026, 3:59 pm
இடைக்காட்டூர் பட்டியலின மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்து  தாக்குதல்!
<p><strong>இடைக்காட்டூர் பட்டியலின மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்து &nbsp;தாக்குதல்!</strong></p> <p>சென்னை, மார்ச் 5 - இடைக்காட்டூரில் பட்டியலின மக்களின் குடியிருப்பிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய &nbsp;கொலைவெறித் தாக்குதல்! சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், வே. புதுக்குளம் கிராமத்தைச் சார்ந்த மகேஷ்வரன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட &nbsp;ஒரு வன்முறைக்கும்பல் மூன்று இரு சக்கர வாக னங்களில் கையில் நான்கு பட்டாக்கத்திகளுடன் 03.03.2026 அன்று பட்டியலின மக்கள் வாழும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்து கொடூரத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ராசு, தினேஷ், ராஜேந்திரன், சுப்பிரமணியன் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. சாதிய மேலாதிக்க போக்கே காரணம்! சாதிய மேலாதிக்கத்துடன் இந்த கும்பல் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த கொடூரக் குற்றவாளிகள் மீது மானாமதுரை காவல் நிலையத்தில் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. குற்றவாளிகளில் நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளி கள் அனைவரையும் கைது செய்திட வேண்டும். &nbsp;தொடர் குற்றச்சம்பவங்களின் பின்னணியை அறிய வேண்டும் இவ்வாறான தாக்குதல்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இது போன்ற குற்றங்கள் எந்த &nbsp;பின்னணியில் நடைபெறுகிறது என்பதை அறிந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். &nbsp;தொடர் குற்றங்களில் ஈடுபடக் கூடிய குற்றவாளி களின் வழக்குகளை திறம்பட விரைவாக நடத்தி கடுமையான தண்டனைகளை உறுதிப்படுத்து வதின் மூலம் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற் படுத்த முடியும். எனவே, இதுபோன்ற வழக்கு களை அரசு விரைவாகவும், திறம்படவும் நடத்திட வேண்டும். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். சட்டப்படியான தீருதவி மற்றும் நிவாரணங்களை அரசு வழங்குவதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், இடைக்காட்டூர் கிராமத்திற்கும் உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.