தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் வாகனம் மீது தாக்குதல்! ஒளிந்துகொள்ளக்கூட முடியாது; ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு ஜிதேந்திர சௌத்ரி கடும் எச்சரிக்கை

28 Sept 2026, 10:23 pm
திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் வாகனம் மீது தாக்குதல்! ஒளிந்துகொள்ளக்கூட முடியாது; ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு ஜிதேந்திர சௌத்ரி கடும் எச்சரிக்கை

திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் வாகனம் மீது தாக்குதல்! ஒளிந்துகொள்ளக்கூட முடியாது; ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு ஜிதேந்திர சௌத்ரி கடும் எச்சரிக்கை

அகர்தலாபாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள காளிபஜாரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய் எப்ஐ) மோகன்பூர் கோட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திரிபுரா முன் னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் காளிபஜார் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப் போது மாணிக் சர்க்கார் சென்ற காரை வழிமறித்து ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

டிஒய்எப்ஐ பதிலடிமாநாட்டைச் சீர்குலைக்க முயன்ற பாஜக குண்டர்களின் இந்தத் தாக்குதலை அறிந்த வாலிபர் சங்கத் தோழர்கள் கொடிகளுடன் பதிலடி கொடுத்தனர். இந்த எதிர்த்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாஜக குண்டர்கள் அங் காப்புப் படையினரும் மாணிக் சர்க் காரைப் பாதுகாப்பாகக் காளிபஜார் மாநாட்டுத் திடலுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர் திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய மாணிக் சர்க்கார்,”கோட்ட மாநாட் டில் கலந்துகொள்வதற்காக வாலிபர் சங்கம் எனக்கு அழைப்பு விடுத்திருந்தது. நண்பகலுக்குள் மாநாட்டுத் திடலைச் சென்றடையத் திட்டமிட்டிருந்தேன். நான் சென்ற வாகனம் காளிபஜார் வழியாக மாநாட் டுத் திடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இடைமறிக் கப்பட்டது. சம்பவ இடத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் களும் இருந்தனர். அவர்கள் தடையை அகற்றி வழியைச் சீரமைக்க முயன்றனர். ஆனால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அந்தச் சமயத்தில், வாலிபர் சங்கத் தோழர்கள் கொடிகளுடன் மாநாட்டுத் திடலிலிருந்து வந்தனர். பதிலடியுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் பாதுகாப்புப் படையினரின் முன்னிலையில், வாலிபர் சங் கத் தோழர்கள் வாகனப் பேரணியின் பக்கபலமாக நின்றும், முழக் கங்களை எழுப்பியும், இறுதியாக மாநாட்டுத் திடலுக்கு அழைத்துச் சென்றனர்” என அவர் கூறினார்.

ஜிதேந்திர சௌத்ரி எச்சரிக்கைஇந்தச் சம்பவம் தொடர்பாகச் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சௌத்ரி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில்,”மாணிக் சர்க்கார் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்; அவரது நிகழ்ச்சியில் இவ் வளவு நீண்ட நேரம் தடை எப்படி அனுமதிக்கப்பட்டது? சிபிஎம் கட்சி மற்றும் டிஒய்எப்ஐ அமைப்பு தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் அல்ல. பிறகு எப்படி டிஒய்எப்ஐ மாநாட்டு நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க முடியும்? இந்தச் சம்பவம் பாஜகவின் பூஜ்ய சகிப்புத்தன்மையைக் குறிக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் தற்காலிகக் காவல்துறை தலைமை இயக்குநரிடம் பேசினேன். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இத்தகைய வெட்கக்கேடான நடவடிக் கைகளில் ஈடுபடுவதிலிருந்து பாஜக தொண்டர்கள் விலகி இருக்க வேண்டும். இதுபோன்ற வன்முறைச் செயல்களை எதிர்த்து மக்களுடன் வீதியில் இறங்கினால் பாஜகவினரால் ஒளிந்து கொள்ளக்கூட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.