பட்டியலின மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்
3 Jun 2026, 9:52 pm
<p><strong>பட்டியலின மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்</strong></p><p>விருதுநகர், ஜூன் 3- தென்காசி மாவட்டம், நெட்டூர் கிரா மத்தில் திருமண வீட்டிற்குள் முகமூடி அணிந்த கும்பல் பட்டியலின மக்களை கொடூர ஆயுதங்களால் தாக்கியது. இத னைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்துக்குமார் தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் எம். ஊர்க்காவலன் பேசினார். மாநில பொரு ளாளர் கே.முருகன், விசிக -சக்திவேல், ஆதித் தமிழர் பேரவையின் கௌதமன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன் கண்டன உரையாற்றினார். இராமநாதபுரம் இராமநாதபுரம் அரண்மனை அருகில் மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் நா.கலையரசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, தாலுகாச் செயலாளர் என்.வெங்கடேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கல்யாணசுந்தரம், டி.முத்துப்பாண்டி, தீ.ஒ.மு மாவட்ட பொரு ளாளர் வி.முருகன், மாவட்ட துணைச் செய லாளர் தர்மராஜ், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட தலைவர் ராஜேஷ், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் எஸ்.பி.பூமி நாதன், தமுஎகச மாவட்டத் தலைவர் இரா. ஆ.வான்தமிழ் இளம்பரிதி, விசிக திரு வாடானை தொகுதி மாவட்டச் செயலாளர் பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
