அட்மா திட்ட கால்நடை வளர்ப்பில் கழிவு மேலாண்மை பயிற்சி
5 Jun 2026, 10:42 pm
<p><strong>அட்மா திட்ட கால்நடை வளர்ப்பில் கழிவு மேலாண்மை பயிற்சி</strong></p><p>அரியலூர், ஜுன் 5- செந்துறை வட்டாரத்தில் கட்டையன்குடிக்காடு கிராமத்தில், வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் அட்மா திட்டத்தில், விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் கழிவு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி தலைமை வகித்தார். பயிற்சியின் தொடக்கத்தில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பின்னர் பேசிய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விவசாயிகளிடத்தில் விவசாய அடையாள எண் பெறுவதன் முக்கியத்துவத்தை பற்றியும் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள்/உதவி தோட்டக்கலை அலுவலர்கள்/அட்மா திட்ட அலுவலர்கள்/பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி பேசுகையில் வேளாண்மைத் துறையின் திட்டங்கள், இடுபொருட்களின் விபரம், உழவன் செயலி, பசுந்தாள் உரப்பயிர்களின் பயன்கள் மற்றும் மானிய விபரங்கள் பற்றியும் எடுத்து கூறினார். இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சுகந்தி, உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவா மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
