தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூடைகள்

7 May 2026, 9:43 pm
ஆத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூடைகள்

ஆத்தூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூடைகள்

சின்னாளப்பட்டி, மே 7- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூ ரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் மூடைகள் நனைந்து சேதமடைவதால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆத்தூர், பழைய செம்பட்டி, அக்கறைப்பட்டி, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், பாளையங்கோட்டை, கூலம்பட்டி, காமன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 40 நாட்களாக அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகள் இங்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையத்தில், ஏ-கிரேடு நெல் ஒரு கிலோ ரூ.25.45-க்கும், 40 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ. 1,018-க்கும் கொள்முதல் செய்யப் படுகிறது.

அதேபோல், சி-கிரேடு நெல் ஒரு கிலோ ரூ.25 என்ற விலைக்கு, 40 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ.1,000-க்கு வாங்கப்படு கிறது.

கடந்த 40 நாட்களில் சுமார் 30 ஆயி ரம் நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,500 நெல் மூடைகள் கொள்முதல் செய்வ தற்காக திறந்தவெளியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் அருகே பள்ளபட்டியில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப தயா ராக இருந்த நெல் மூடைகள், கடந்த சில நாட்களாக ஆத்தூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நனைந்து சேதமடைந்துள்ளன.

விவ சாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூடைகளும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த போதி லும், மழைநீர் ஊறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், நெல் தரம் பாதிக்கப் படுமோ என்ற அச்சத்தில் விவசாயி கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூடைகள் மழையில் நனை யாத வகையில் உயரமான மேடை கள் மற்றும் நிரந்தர பாதுகாப்பு வசதி கள் ஏற்படுத்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.