தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி கல்விக் கட்டண உயர்வை கைவிடுக!

18 May 2026, 9:43 pm
ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி கல்விக் கட்டண உயர்வை கைவிடுக!

ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி கல்விக் கட்டண உயர்வை கைவிடுக!

திண்டுக்கல், மே 18 - திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு அறிவியல் கலைக் கல்லூரியின் கல்விக்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது.

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி முயற்சி

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், ஆத்தூர் கூட்டுறவு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி கடந்த 2022 வருடம், தனியார் கல்வி வளாகத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஓன்றியத்தின் கீழ் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் கருதி துவங்கப்பட்டது. கூட்டுறவு துறையின் சார்பில் கல்லூரிக்கான சொந்த கட்டிடம் அமைப்பதில் ஏற்பட்ட சிரமங்களின் போது, அப்போதைய தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பெரியசாமி கிராமப்புற கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தனது தனிப்பட்ட முயற்சியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மாணவர்கள் அனைத்து வசதிகளையும் பெற மிகவும் உறுதுணையாக இருந்தார்.

6 மடங்கு உயர்ந்த கல்விக் கட்டணம்

அப்போதைய முதலாம் ஆண்டு கல்விக்கட்டணம் ரூ. 1415- மட்டுமே. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அதிகளவில் பயனடைந்தனர். தற்போது தமிழ்நாடு கூட்டுறவு ஓன்றியத்தின் நிதியிலிருந்து கல்லூரியின் புதிய கட்டடம் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஓன்றியம், சென்னை பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதம் வாயிலாக முதலாம் ஆண்டு கல்வி கட்டணமாக ரூ. 10,415- (பத்தாயிரத்து நானூற்று பதினைந்து) மற்றும் இரண்டாம் ஆண்டு கல்விக்கட்டணமாக ரூ. 10,060 மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ. 11,960- வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்கள் கடுமையான பாதிப்பு

மிகவும் கடுமையான பொருளாதார சூழல் நிலவும் தற்போதைய நிலையில், மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, தமிழக அரசு ஏற்கனவே கடந்த ஆண்டு நிர்ணயித்த கல்விக்கட்டணமே மீண்டும் என்பது தொடர வேண்டும் என கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர். மிகவும் கடுமையான பொருளாதார சூழல் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, தமிழக அரசு கடந்த ஆண்டு பெறப்பட்ட கல்விக்கட்டணத்தை நிர்ணயித்திட வேண்டும் என கிராமப்புற மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.