மினி ஸ்டேடியத்தை கும்மிடிப்பூண்டி அருகில் அமைக்க வேண்டும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஆர்ப்பாட்டம்
28 Dec 2025, 5:05 pm
<p><strong>மினி ஸ்டேடியத்தை கும்மிடிப்பூண்டி அருகில் அமைக்க வேண்டும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவள்ளூர், டிச. 28- பூவலம்பேட்டில் அமையவுள்ள மினி ஸ்டேடி யத்தைக் கும்மிடிப்பூண்டி நகருக்கு அருகில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி விளையாட்டு குழுவினர் சார்பில் ஞாயிறன்று (டிச. 28), கவன ஈர்ப்பு ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குத்துச் சண்டை, கராத்தே, கிரிக்கெட் மட்டுமின்றி பாரம் பரிய விளையாட்டுகளான கபடி, வில்வித்தை, யோகா, சிலம்பம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்சிய ளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் பலர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இன்னும் பல போட்டிகளில் தேசிய அள வில் முதலிடம் பெறச் சென்னை போன்ற நகரங்க ளுக்குச் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். விளை யாட்டுகளில் வெற்றி பெறு வதுடன் பல துறைகளில் வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி நகரில் ஒருங்கிணைந்த விளை யாட்டு மைதானம் இல்லாத தால், பயிற்சியாளர்கள் இன்றி அவதிப்படுகின்றனர். இந்தச் சிரமங்களைப் போக்க வேண்டும், கும்மிடிப் பூண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தமிழ் நாடு அரசு சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் விளை யாட்டு மைதானம் அமைக் கப் பணம் ஒதுக்கீடு செய்தது. ஆனால் விளையாட்டு மைதானம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடம் நகர்ப்புறப் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டருக்கு அப்பால், போக்குவரத்து வசதி இல்லாத பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அமிர்தமங்கலத்தில் அமைக்க இடம் தேர்வு செய்து நிலத்தைச் சமன் படுத்தி வருகின்றனர். இதற்குக் கும்மிடிப்பூண்டி யில் உள்ள விளையாட்டுக் குழுக்கள் எதிர்ப்புத் தெரி வித்துள்ளன. அதுவும் தலித் மக்களுக்கு வழங்கிய நிலத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கு அம்மக்க ளும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் கும் மிடிப்பூண்டி நகருக்கு அருகில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடமும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ-விடமும் விளையாட்டுக் குழு வினரால் மனுவும் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பய னற்ற இடத்தில் தொடர்ந்து பணிகள் நடைபெறுவதாகக் கூறி விளையாட்டுக் குழு வினர் சார்பாகக் கும்மிடிப் பூண்டி பேருந்து நிலையத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஞாயிறன்று (டிச. 28) நடைபெற்றது. இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழக அரசு செவிசாய்க்கா விட்டால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விளை யாட்டுக் குழுவினரையும் விளையாட்டு வீரர்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்த உள்ள தாகவும் விளையாட்டுக் குழு வின் சார்பாகத் தெரிவிக்கப் பட்டது. இந்தப் போராட்டத் திற்குக் கஜா பாக்ஸிங் கிளப் பயிற்சியாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர் அப்துல்லா பாக்சர், நவநீஷ் பாக்ஸர், தேவ ஆகாஷ், சிலம்பம் பயிற்சியாளர் ஜோதி ஆகி யோர் பேசினர்.</p>
