அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்
14 Jun 2026, 2:01 am
<p><strong>அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்</strong></p><p>அவிநாசி, ஜூன் 13- அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட் டம் உயர்ந்து விவசாயம் புத்துயிர் பெற்று வருகிறது. எனினும், இத்திட்டத் தின் பயன்கள் முழுமையாக கிடைக்க விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது முக்கிய குளங்களுக்கு நீர் சென்றாலும், ஏராளமான சிறிய, நடுத்தர அளவிலான குளங்கள் மற் றும் குட்டைகள் இத்திட்டத்தில் விடு பட்டுள்ளன. இவற்றையும் இணைத் தால், மழைக்கால உபரி நீரை முழுமை யாகச் சேமித்து, கூடுதல் கிராமங்கள் பயன்பெற வழியேற்படும். மேலும், பல மாதங்களாகத் தண் ணீர் தேங்கி நிற்கும் இக்குளங்களில் மீன் வளர்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத் துள்ளது. நீர் நிரம்பியுள்ள குளங்களில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் கிராமப்புற இளை ஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்த மீன் வளர்ப்பு உரிமைகளை வெளிநபர்களுக்கு டெண்டர் விடாமல், உள்ளூர் விவசாயிகள், மகளிர் சுய உத விக்குழுக்கள், இளைஞர் அமைப்புக ளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை வெறும் நீர் நிரப்பும் திட்ட மாக மட்டுமின்றி, மீன்வளம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்ப டுத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டமாக மாற்ற அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>
