கோவை, கவுண்டம்பாளையத்திலுள்ள மதரஸா வளாகத்தில்
8 Mar 2026, 3:42 pm
<p>கோவை, கவுண்டம்பாளையத்திலுள்ள மதரஸா வளாகத்தில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் எம்.ஜெரோம் ரோட்ரிக்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சாதிக் பாட்சா, மாவட்ட பொறுப்பாளர் என்.ஆர் முருகேசன், பொருளாளர் எஸ்.கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
