ஏகாதிபத்தியத்தின் காலடியில்! இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்றுத் துரோகம் - பேரா. பிரபாத் பட்நாயக்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>ஏகாதிபத்தியத்தின் காலடியில்! இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்றுத் துரோகம்</strong></p>
<p>இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அண்மையில் எட்டப் பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம், அதன் மேலோட்டமான விபரங்களைக் கடந்தால், இரண்டு மிக வினோதமான மற்றும் அதிர்ச்சிகர மான அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை தன்னாட்சி கொண்ட இரு நாடுகளுக்கு இடையே யான சமமான ஒப்பந்தமாகத் தெரியவில்லை; மாறாக, கடந்த காலத்தில் ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் நேரடி ஆட்சியின் கீழ் இல்லாத ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்த ‘சமமற்ற ஒப்பந்தங்களை’ (Unequal Treaty) அப்படியே பிரதிபலிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், நம் நாடு இவ்வளவு பலவீனமாக ஓர் ஏகாதிபத்திய ஒப்பந்தத்தில் மண்டியிட்டு நிற்பது இதுவே முதல்முறையாகும். சந்தை விதிகளுக்குப் புறம்பான கட்டாய நிபந்தனைகள் இந்த ஒப்பந்தத்தின் முதல் விநோத அம்சம், வரி விகிதங்களில் காணப்படும் அதீத வேறுபாடு. டொனால்டு டிரம்ப் விவரித்தது போல, இந்தியப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைய 18 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் நிலையில், அமெரிக்கப் பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைய ‘பூஜ்ஜிய’ வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும். இத்தகைய ஒருதலைப்பட்சமான வரி முறையை ஓர் ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வ மாக அங்கீகரிப்பது பொருளாதார ரீதியாக தற்கொலைக்குச் சமமானது. இது அமெரிக்கா வின் ‘உடனிருக்கும் நாட்டைக் கையேந்த வைக்கும்’ (Beggar-thy-neighbour) கொள்கை யாகும். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியா, தான் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவதைச் சம்மதித்துத் தானே முன்வந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரண்டாவதாக, அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியா குறைந்தது 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களைக் கட்டாயமாக வாங்க வேண்டும் என்ற நிபந்தனை. ‘சுதந்திரச் சந்தை’ (Free Market) கொள்கையைப் போற்றும் முத லாளித்துவ வர்க்கத்தின் சித்தாந்தத்திற்கே இது முற்றிலும் எதிரானது. ஒரு சந்தையில் எவ்வளவு பொருட்கள் விற்கப்பட வேண்டும் என்பதை வாங்குபவர்களின் விருப்பமே தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசாங்கங்கள் தீர்மானிக்க முடியாது. ஆனால், இந்த ஒப்பந்தமோ ஒரு நாடு இவ்வளவு தொகையைச் செலவிட்டே தீர வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இது வர்த்தக ஒப்பந்தம் என்பதை விட, ஒரு கட்டாயக் கப்பம் கட்டும் முறையாகவே தோன்றுகிறது. எண்ணெய் இறக்குமதியும் ஏழை மக்கள் மீதான சுமையும் தற்போது அமெரிக்காவிலிருந்து சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதியே நடைபெறும் நிலையில், அதை ஒரே ஆண்டில் 100 பில்லியன் டாலராக உயர்த்துவது சாதாரண வர்த்தக உயர்வால் சாத்தியமில்லை. எனவே, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான கச்சா எண்ணெய்யைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக அதிக விலையுள்ள அமெரிக்க எண்ணெய்யை வாங்குவதன் மூலமே இந்த இலக்கை எட்ட அரசு திட்டமிடுகிறது. ரஷ்ய எண்ணெய்யை விட அமெரிக்க எண்ணெய் 20 சதவீதம் அதிக விலை கொண்டது. இதனால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டுக்குச் சுமார் 8 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும். இது நவீன காலத்து ‘செல்வச் சுரண்டல்’ (Drain of wealth) ஆகும். இந்தக் கூடுதல் செலவை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காது; மாறாக, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சாதாரண உழைக்கும் மக்கள் மீதே அந்தப் பாரத்தைச் சுமத்தும். இது சந்தையில் ஒரு தொடர் பணவீக்கத்தை உண்டாக்கும். இதன் விளைவாக உழைக்கும் மக்களின் உண்மை வருமானம் மேலும் வீழும். எனவே, ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு எண்ணெய்க் கொள்முதலை மாற்றுவது என்பது வெறும் ராஜதந்திர விவகாரம் மட்டுமல்ல, அது ஒரு மிக முக்கியமான வர்க்கப் பிரச்சனையுமாகும். இந்திய விவசாயத்தின் மீதான தாக்குதல் விவசாயத் துறையைப் பொறுத்தவரை, அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்கள் ஒப்பந்தத்தில் இல்லை என்று அரசு சமாதானம் கூறினாலும், அது ஒரு மாயையே ஆகும். ஆப்பிள், பருத்தி, சோயா எண்ணெய் மற்றும் பழங்கள் போன்ற முக்கியப் பிரிவுகள் அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. கால்நடைத் தீவன சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களின் விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும். அமெரிக்க விவசாயிகள் லாபமடைவார்கள் என்று அந்நாட்டு அரசு வெளிப்படையாகக் கூறும்போது, அதன் நேரடிப் பொருள் இந்திய விவசாயிகள் இந்தியச் சந்தையிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் என்பதுதான். சுதந்திரப் போராட்டத்தின் போது, இந்திய விவசாயிகள் அந்நியச் சுரண்டலில் இருந்து காக்கப்படுவார்கள் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் இது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்காத ஒரு கட்சி தலைமையிலான அரசு, அந்தப் போராட்டத்தின் நோக்கங்களைச் சிதைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வர்க்க நலன்களும் ஏகாதிபத்தியச் சரணாகதியும் இந்தச் சரணாகதிக்குப் பின்னால் ஒரு தெளிவான வர்க்க அரசியல் ஒளிந்துள்ளது. இந்தியப் பெரு முதலாளித்துவ வர்க்கமும் (Big Bourgeoisie), உயர் நடுத்தர வர்க்க நிபுணர் களும் இந்த ஒப்பந்தத்தை ஆவலோடு வர வேற்கின்றனர். அமெரிக்கச் சந்தை தங்களுக்குக் கிடைக்கும் என்பதால் முதலாளிகளும், டிரம்ப் காலத்தில் தடைபட்ட தங்கள் பிள்ளைகளின் அமெரிக்கக் குடியேற்றம் மீண்டும் எளிதாகும் என்பதால் உயர்தட்டு வர்க்கத்தினரும் உழைக்கும் மக்களின் நலன்களைப் பலியிடத் துணிந்துவிட்டனர். நவதாராளவாதக் கொள்கை கள் தொடங்கிய காலத்திலேயே சிதையத் தொடங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வர்க்கக் கூட்டணி, இன்று முழுமையாக உடைந்துவிட்டது. கடந்த காலத்தில் அமெரிக்க அழுத்தங் களுக்குப் பணிய மறுத்த இந்தியப் பிரத மர்கள் இருந்தார்கள். அவர்கள் அன்றைய காலனியாதிக்க எதிர்ப்புணர்வைக் கொண்டி ருந்தார்கள். ஆனால் இன்றைய நவீன பாசிசப் போக்கு கொண்ட அரசோ, உழைக்கும் மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி ஏகாதிபத்தியத்தின் முன் முழுமையாக மண்டியிட்டு நிற்கிறது. இது பொருளாதார ரீதியான தோல்வி மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதலுமாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, பிப்ரவரி 15, 2026 தமிழில் சுருக்கம்: எஸ்.பி.ஆர்</p>
<p> </p>
