உதவிப் பேராசிரியர் பணி 6 மாதத்தில் தேர்வு நடத்த உத்தரவு
28 May 2026, 9:32 pm
<p><strong>உதவிப் பேராசிரியர் பணி 6 மாதத்தில் தேர்வு நடத்த உத்தரவு</strong></p><p>சென்னை, மே 28 - 1,146 கவுரவ விரிவுரையாளர்களை சிறப்புத் தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தனி நீதிபதி வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மேலும், 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 6 மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.</p>
