தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வில் முறைகேடு உயர்மட்ட விசாரணைக்கு மு.வீரபாண்டியன் கோரிக்கை

1 hour before
உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வில் முறைகேடு உயர்மட்ட விசாரணைக்கு மு.வீரபாண்டியன் கோரிக்கை
<p><strong>உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வில் முறைகேடு உயர்மட்ட விசாரணைக்கு மு.வீரபாண்டியன் கோரிக்கை</strong> </p><p>சென்னை, ஜூன் 28 - தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகள் நம்பகத்தன்மையற்றதாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். தேர்வின் முதல் தாளில் 74% மதிப்பெண்கள் பெற்ற பல தகுதியான தேர்வர்களுக்கு, இரண்டாம் தாளில் ‘பூஜ்ஜியம்’ மதிப்பெண் வழங்கப்பட்டுள் ளது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு வரால் அடுத்த தாளில் பூஜ்ஜியம் எடுக்க வாய்ப்பில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இரண்டாம் தாளில் 98% வழங்கப்பட்டிருப்பது திட்டமிட்ட முறைகேட்டை உறுதிப்படுத்துகிறது என்றார். எனவே, 12 ஆண்டு களுக்குப் பின் நடைபெறும் இந்நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை பணி நியமன நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.