முந்தய பக்கம்

உதவிப் பேராசிரியர் பணி தேர்வில் முறைகேடு?

29 Jun 2026, 9:57 pm
உதவிப் பேராசிரியர் பணி தேர்வில் முறைகேடு?
<p><strong>உதவிப் பேராசிரியர் பணி தேர்வில் முறைகேடு?</strong></p><p>விசாரணைக்கு திருமாவளவன் கோரிக்கை சென்னை, ஜூன் 29 - அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி களில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியி டங்களை நிரப்புவதற்கு கடந்த 2025 டிசம்பர் 27 அன்று நடை பெற்ற எழுத்துத் தேர்வின் முடிவுகளில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வு முடிவுகளில் நம்பகத்தன்மையற்ற மதிப்பெண் வேறுபாடுகள் காணப்படுவதை விசிக தலைவர் தொல். திரு மாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் முதல் தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற வர், அதே பாடத்தின் இரண்டாம் தாளில் 50-க்கு பூஜ்ஜியம் பெற்றுள்ளார். மற்றொருவர் முதல் தாளில் 54 மதிப்பெண் பெற்ற நிலையில் இரண்டாம் தாளில் 49 மதிப்பெண் பெற்றுள் ளார். முனைவர் பட்டம் பெற்ற தகுதியுள்ளவர்கள் பூஜ்ஜியம் பெறும் அளவுக்கு தேர்வு எழுதியிருக்க மாட்டார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், இது குளறுபடியல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடு என்றும் குற்றம் சாட்டி யுள்ள திருமாவளவன், உரிய விசாரணை நடத்தவும், விசா ரணை முடியும் வரை பணி நியமன நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நட வடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram