முந்தய பக்கம்

உதவித் தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

24 Jul 2026, 12:04 am
உதவித் தலைமை ஆசிரியர்  போக்சோ வழக்கில் கைது!
<p><strong>உதவித் தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது! </strong></p><p>செங்கல்பட்டு, ஜூலை 23- செங்கல்பட்டு அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவிக்கு, அதே பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் சந்தோஷ்குமார் (45) என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியரின் இந்த அத்துமீறல் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாகக் கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் உதவித் தலைமை ஆசிரியர் சந்தோஷ்குமாரைக் கைது செய்தனர். பின்னர் அவரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram