தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுருளி அருவிச் சாலை சீரமைக்கப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உதவி வனப்பாதுகாவலர் தகவல்

27 Feb 2026, 5:32 pm
சுருளி அருவிச் சாலை சீரமைக்கப்படும்  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உதவி வனப்பாதுகாவலர் தகவல்
<p><strong>சுருளி அருவிச் சாலை சீரமைக்கப்படும் &nbsp;விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உதவி வனப்பாதுகாவலர் தகவல்</strong></p> <p>தேனி,பிப்.27- சுருளி அருவி செல்லும் சாலை யை சீரமைக்க ரூ 66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விரைவில் பணி தொடரும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேகமலை -ஸ்ரீவில்லிபுத்தூர் புலி கள் சரணாலய உதவி வன பாதுகா வலர் சாய்சரண் ரெட்டி தெரி வித்துள்ளார். தேனி மாவட்டத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை &nbsp;மாவட்ட வரு வாய் அலுவலர் ப.ராஜகுமாா் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் மாவட்ட வன அலுவலா் &nbsp;கிரண்,மேகமலை -ஸ்ரீவில்லி புத்தூர் புலிகள் சரணாலய &nbsp;உதவி வனப்பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி, &nbsp;வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு) நா்மதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர்(விவ) இரா.வளர்மதி மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா் . கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.நாக ராஜன் பேசுகையில், &nbsp;விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு &nbsp;காலதாமதமாக அதாவது கூட்டத்தி ற்கு முதல் அல்லது இரண்டு நாட்கள் முன்பு தான் பதில் வரு கிறது. நிராகரிக்கப்படும் மனுக்களு க்கு செல்போன் மெசேஜ் மட்டும் வருகிறது.மயிலாடுதுறை கிராமம் கோவிலான் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தனிநபர் 220 தென்னை மரங்கள், 2 &nbsp;மாமரங் கள் &nbsp;வைக்கப்பட்டுள்ளது என நீர்வ ளத்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு மரத்தி ற்கும் எண் எழுதப்பட்டு உள்ளது. தோட்டக்கலை துறை மூலம் மதிப் பீடு செய்ய அனுப்பப்பட்டு &nbsp;உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது &nbsp;உடனடியாக &nbsp;மதிப்பீடு செய்து நீர்வளத்துறை மூலம் ஏலம் விட்டு &nbsp;அதன் வருமானத்தை அரசுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். &nbsp;சுருளி அருவியில் &nbsp;ஊராட்சி சார்பில் வாகனங்களுக்கும் ,வனத் துறை சார்பில் ஒவ்வொரு நப ருக்கும் நுழைவு கட்டணம் ரூ. 30 வசூலிக்கப்படுகிறது .அதே போல் கடமலை மயிலை ஒன்றி யத்தில் மேகமலை &nbsp;சின்ன சுருளி அருவியில் இதேபோல் நுழை வுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது &nbsp;ஆனால் இரண்டு அருவிகளிலும் சாலை வசதி, கழிப்பிட வசதி, பெண்கள் உடை மாற்றும் அறை, குளிக்கும் இடத்தில் தடுப்பு கம்பிகள் உடைந்து எந்தவித பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கூறினார் . அதற்கு பதில் அளித்த உதவி வனப்பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி , &nbsp;சுருளி அருவியில் உள்ள சாலைகள் செப்பணிடுவதற்கு 66.5 &nbsp; லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்குள் பணிகள் துவங்கும் என்று தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.