தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்ற தேர்தல் களம் கோவை, மார்ச் 22- அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல: இரா.முத்தரசன்

22 Mar 2026, 4:19 pm
சட்டமன்ற  தேர்தல்  களம் கோவை, மார்ச் 22- அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல: இரா.முத்தரசன்
<p><strong>சட்டமன்ற &nbsp;தேர்தல் &nbsp;களம் கோவை, மார்ச் 22- அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல: இரா.முத்தரசன்</strong></p> <p>கொடுக்கின்ற இடங்களை ஏற்றுக்கொண்டு அடிபணிவதற்கு நாங்கள் அதிமுகவை போல் அடிமை அல்ல, என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்தின் ஒரு &nbsp;பகுதியாக, திமுக கூட்டணியின் முக் கிய பிரமுகர்களை சந்திப்பதற்காக கோவை மாவட்டம், பெரியநாயக் கன்பாளையத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் இரா. முத்தரசன் ஞாயிறன்று வருகை &nbsp;தந்தார். அப்போது அவரிடம் செய்தி யாளர்கள், இந்த தேர்தலில் ஒரு &nbsp;தொகுதி குறைவாகப் பெற்றுள்ள தால், சிபிஐ சமரசம் செய்து கொண்டதா? என்ற கேள்விக்கு, திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி &nbsp;என்பது ஒரு கொள்கைக் கூட்டணி. &nbsp;தமிழக தேர்தல் வரலாற்றில் 1952 &nbsp;ஆம் ஆண்டு முதல் பல்வேறு &nbsp;கூட்டணிகள் அமைக்கப்பட்டிருந் தாலும், எந்தவொரு கூட்டணியும் ஓராண்டுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால், தற்போதைய திமுக கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக வலுவாக நீடிப்பதற்கு எங்களின் கொள்கை பிடிப்புதான் காரணம். &nbsp;எங்களுக்கு தொகுதி எண்ணிக்கை என்பது ஒரு பிரச்சனையே இல்லை. &nbsp;தற்போது நாட்டுக்கு எது மிகப் பெரிய ஆபத்து என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வின் கொள்கைகள்தான் தேசத் திற்குப் பெரும் தீங்கானது. இந்த தீங்கிற்கு தமிழகத்தில் சிலர் (அதிமுக) துணைபோய்விட்டனர். இவர்களை அனுமதிப்பது தமிழகத் திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்தானது. அந்த &nbsp;அக்கறையும், பொறுப்பும் எங்க ளுக்கு இருப்பதால் தான் இந்த &nbsp;எண்ணிக்கையை ஏற்றுக் கொண் டுள்ளோம். தொகுதி கூடுவதைப் &nbsp;பற்றியோ, குறைவதைப் பற்றியோ &nbsp;எங்களுக்கு கவலை இல்லை, &nbsp;என்றார். இந்நிகழ்வில், சட்டமன்ற &nbsp;முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.விஷ்வபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.