சட்டமன்றத் தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு
25 Mar 2026, 5:29 pm
<p><strong>சட்டமன்றத் தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு</strong></p>
<p>மதுரை, மார்ச் 25- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர் தல் பணிகள் மதுரை மாவட் டத்தில் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. அதனொரு பகுதியாக, மாவட்ட தேர்தல் அலுவல ரும் மாவட்ட ஆட்சியருமான கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில், புதனன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் பணியில் ஈடுபட வுள்ள வாக்குச்சாவடி தலை மை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் சட்ட மன்றத் தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சுழற்சி முறை ஒதுக்கீடு நடவடிக்கை, தேர் தல் பணிகளில் வெளிப் படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வ தற்கான முக்கியமான கட்ட மாகும். இதன் மூலம், அலு வலர்கள் தங்களது சொந்த பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் பணியமர்த்தப் படுவது உறுதி செய்யப்படு கிறது. மேலும், தேர்தல் பணி களைச் சிறப்பாக மேற் கொள்ள தேவையான வழி முறைகள், பொறுப்புகள் மற்றும் நடத்தை விதிமுறை கள் குறித்தும் அதிகாரி களுக்கு விளக்கங்கள் வழங் கப்பட்டன. வாக்குப்பதிவு நாளில் எந்தவித குறைபாடு களும் இல்லாமல், சீரான மற்றும் சுதந்திரமான தேர் தலை நடத்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவு றுத்தினார். இந்த நிகழ்வில், தேர்தல் தொடர்பான உயர் அதி காரிகள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
