தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்ற தேர்தல் களம் திருப்பூர் : சட்டமன்ற

18 Mar 2026, 3:34 pm
சட்டமன்ற  தேர்தல்  களம் திருப்பூர் : சட்டமன்ற
<p><strong>சட்டமன்ற &nbsp;தேர்தல் &nbsp;களம்&nbsp;திருப்பூர் : சட்டமன்ற&nbsp;</strong></p> <p>திருப்பூர் மாவட்டம் உருவாகி 17 ஆண்டுகள் ஆகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களின் பகுதிகளை இணைத்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பின், ஒரே தொகுதியாக இருந்த திருப்பூர் தொகுதி, திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பொங்கலூர், வெள்ளகோவில் தொகுதிகள் நீக்கப்பட்டன. அவிநாசி, தாராபுரம் ஆகிய இரு தனி தொகுதிகள் மற்றும் திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), காங்கேயம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு தொகுதிகள் உள்ளன. இந்த எட்டு தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 10 ஆயிரத்து 853 பேர், மாற்றுப் பாலினர் 252 பேர் என மொத்தம் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் உள்ளனர். மொத்தம் 2 ஆயிரத்து 822 வாக்குச்சாவடிகள் உள்ளன. மிகப்பெரிய தொகுதி பல்லடம் (3,22,530 பேர்), மிகச்சிறிய தொகுதி திருப்பூர் தெற்கு (1,93,614 பேர்). எட்டு தொகுதிகளிலுமே பெண் வாக் காளர்கள்தான் அதிகம். மாவட்டத் தலைநகரமான திருப்பூர் பின்னலாடைத் தொழில் நகரம் என்பதால் முதல் பார்வைக்கு, தொழில் மாவட்டமாக தெரியும். ஆனால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம், அமராவதி ஆறு பாசனத் திட்டம் மற்றும், கீழ் பவானி பாசனத் திட்டத்தின் ஒரு பகுதி ஆகியவை உள்ள டக்கி தொழிலும், விவசாயமும் சம அளவில் நிறைந்த மாவட்டமாக திருப்பூர் உள்ளது. பின்னலாடைத் தொழில் மட்டுமின்றி, விசைத்தறி &nbsp;ஜவுளித் தொழில், கோழிப்பண்ணை, ஓரளவு இன்ஜினியரிங் ஆகியவையும் இங்குள்ளன. விவசாயத்தைப் பொறுத்தவரை மானாவரி சாகுபடியுடன், தென்னை விவசாயம், கரும்பு, நெல், காய்கறி உற்பத்தி ஆகியவையும் நடைபெறுகின்றன. தொகுதி வாரியாக பல்வேறு கோரிக்கைகள் இருந்தாலும், ஜவுளித் தொழில், விவசாயத்திற்கான முக்கியக் கோரிக்கை கள் ஒன்றிய அரசு, மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய கொள்கை முடிவுகளைச் சார்ந்துள்ளன. அந்நியச் செலவாணி ஈட்டித்தரும் பின்னலாடை ஏற்று மதி தொழில், உள்நாட்டு பின்னலாடை, விசைத்தறி உற்பத்தி &nbsp;தொழில் ஆகியவை ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை காரணமாக நெருக்கடியை சந்திக் கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பின்னலாடை, விசைத்தறி தொழிலில் மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடி கிறது. மூலப்பொருள், மற்றும் துணைப்பொருட்கள் தொடர் &nbsp;விலையேற்றம், சந்தை நெருக்கடி, வங்கி கடன் வசதி சுருங்கி யிருப்பது போன்றவை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் மின் கட்டண உயர்வு சிறு, குறு, நடுத்தரத் தொழில் களுக்கு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. விவசாயம் சார்ந்து பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கடை மடை வரை பிஏபி தண்ணீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைத்து துணைத் திட்டத்தை நிறைவேற்றவும், ஏற்கெனவே நிறைவேற்றிய திட்டத்தில் உரிய அளவு தண்ணீர் வந்து சேருவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். விவசாய மின் இணைப்புகள், தெரு நாய்களால் ஆடு, மாடு, கோழிகள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவது, இழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது, விவசாய பொருட்களுக்கு விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கச் செய்வது, பூச்சித் தாக்குதல் பிரச்சனைக்குத் தீர்வு, விவசாய நிலங்களை சர்பாஸி சட்டத்தில் கைப்பற்றுவதை தடுப்பது, இனாம் நிலம், வக்பு நிலம் பிரச்சனைகளுக்கு விவசாயிகளுக்கு உரிய நியாயம் வழங்குவது ஆகியவையும் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. &nbsp;மாவட்டம் முழுவதும் நகரம், கிராமம் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் வீட்டுமனைப் பட்டா, குடியிருப்பு கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறை வேற்றப்படாமல் உள்ளன. பூமி தானம், நிலச்சீர்திருத்தச் சட்ட &nbsp;நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு உரிய பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவது, நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக் காமல் நிறைவேற்றுவது, நகர்ப்புறங்களில் புலம் பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களுக்கும் வீட்டு வசதி, சுகாதாரம், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதியை முழுமை யாக நிறைவேற்றுவது, சொத்து வரி வருடாந்திர 6 சதவிகித உயர்வு, அபாரதம், ஆகியவற்றை ரத்து செய்வது, மாநகரில் குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது என மக்கள் கோரிக்கைகள் கொட்டிக் கிடக்கின்றன. தொகுதி வாரியான முக்கிய கோரிக்கைகள் திருப்பூர் (வடக்கு): வடக்கு பகுதி ஊராட்சிகளில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக நிறை வேற்றம், பெருமாநல்லூரில் தரம் உயர்த்திய 24 மணி நேர அரசு மருத்துவமனை, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இஎஸ்ஐ மருத்துவமனை முழுமையாக செயல் பட சிறப்பு மருத்துவர்கள், பணியாளர்கள் நியமனம், போக்குவரத்து வசதிக்கு பாலங்கள் கட்டுவது போன்றவை திருப்பூர் (தெற்கு): ஆட்சியரகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகள் என முக்கிய அரசு சார்ந்த &nbsp;நிறுவனங்கள் உள்ள இத்தொகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண கூடுதல் சாலை, பாலங் கள், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு, பாதாளச் சாக் கடை முழுமையாக நிறைவேற்றம், நொய்யல் சீர மைப்பு, உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் ஆகிய வற்றுக்கு தேவையான வசதிகள். அவிநாசி (தனி): அத்திக்கடவு-அவிநாசி திட்டத் தில் விடுபட்ட குளங்களை இணைத்தல், விவசாயிக ளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குதல், அவிநாசி கோவில் பகுதியில் அனைத்துப் பகுதி மக்கள் திரு மணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பொது சமுதாய நலக் கூடம், கிராமப்புற சாலைகள் சீரமைப்பு, வாழை உள் ளிட்ட விவசாயம் சார்ந்த பகுதிகளில் உரிய விலை, காப் பீடு, பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை, அவி நாசி நகர் சார்ந்து தொழிலாளர்களுக்கு போதிய குடியி ருப்பு வசதி, அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல். &nbsp; தாராபுரம் (தனி): உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வருதல், அமராவதி பாசனம் நெல் சாகுபடி, கொள்முதலுக்கு உரிய வசதி, மூலனூர் பகுதி செங் காந்தல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க ஏற்பாடு, உபரிநிலம் மீட்பு, ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது. குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு, &nbsp;பல்லடம்: பல்லடம் நகரில் போக்குவரத்து நெருக் கடிக்கு பாலம் அமைத்து தீர்வு, விசைத்தறி தொழில் நலிவை போக்க உரிய அரசின் உதவி, விசைத்தறி ஜவுளிச்சந்தை அமைப்பது, கோழிப்பண்ணை தொழி லுக்கு நியாயமான வளர்ப்புக் கூலி, தெற்கு, மேற்கு வறட்சி பகுதிகளுக்கு உபரிநீர் குட்டைகளில் நிரப்பும் &nbsp;புதிய திட்டம், விவசாய நிலங்களை பாதிக்காதபடி சாலை வளர்ச்சித் திட்டங்கள், பொங்கலூரில் விவசாயப் பொருட்கள் குளிர்பதனக் கிடங்கு, ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது. காங்கேயம்: காங்கயம் காளைகள் இனத்தைப் பாதுகாக்கும் ஆராய்ச்சி மையம், வறட்சிப் பகுதிக்கு போதுமான நீர்ப்பாசன வசதியை உறுதிப்படுத்துவது, வெள்ளகோவில் விசைத்தறி தொழிலுக்கு உதவி, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைக ளுக்கு மானியம் வழங்குதல், பட்டியலின மக்க ளுக்கு பட்டா, கோவை திருச்சி நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை உடுமலைப்பேட்டை: திருமூர்த்தி அணையின் பாசன காலத்தை முறைப்படுத்துதல் மற்றும் இப்பகுதி யில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல். தென்னை &nbsp;விவசாயப் பாதுகாப்பு, காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களுக்கு நியாயமான விலை, திருமூர்த்தி மலை வாழ் செட்டில்மெண்ட் மக்களுக்கு அடிப்படை போக்கு வரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள். மடத்துக்குளம்: விவசாய விளை பொருட்களுக் கான (குறிப்பாக கரும்பு மற்றும் தென்னை) கொள் முதல் நிலையங்களை அதிகரித்தல். அமராவதி சர்க் கரை ஆலையை புதுப்பித்து இயக்க நடவடிக்கை.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.