முந்தய பக்கம்

பாஜக ஆளும் அசாமில் வாங்சுக் ஓவியம் வரைந்த மாணவர்கள் கைது

20 Jul 2026, 9:45 pm
பாஜக ஆளும் அசாமில் வாங்சுக் ஓவியம் வரைந்த மாணவர்கள் கைது
<p><strong>பாஜக ஆளும் அசாமில் வாங்சுக் ஓவியம் வரைந்த மாணவர்கள் கைது </strong></p><p>நீட் முறைகேடுகளை கண்டித்த தில்லி மருத்துவமனையில் 20 நாட்களுக்கும் மேலாக உண்ணா விரதம் இருக்கும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் ஓவியத்தை சுவரில் வரைந்ததற்காக பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் முக்கிய நகரான கவுகாத்தி நகரத்தின் மேம்பாலத் தூண் ஒன்றில் சோனம் வாங்சுக்கின் பெரிய ஓவியம் வரையப்பட்டு, அது பொது மக்களின் கவனத்தை ஈர்த்த மறுநாளே, வெள்ளியன்று இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் திப்ரு காரைச் சேர்ந்த நகுல் மிலி, கவுகாத்தி யின் தக்சிசாங்கானைச் சேர்ந்த கவுரவ் சிங் என்று அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியின் மாணவர்கள் ஆவர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram