தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அசாமிற்கு மீண்டும் ரெட் அலர்ட்10 மாவட்டங்களில் பதற்றமான சூழல்

5 Aug 2026, 8:38 pm
அசாமிற்கு மீண்டும் ரெட் அலர்ட்10 மாவட்டங்களில் பதற்றமான சூழல்

அசாமிற்கு மீண்டும் ரெட் அலர்ட்10 மாவட்டங்களில் பதற்றமான சூழல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் 2 வாரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் மாநிலத்தின் 68% பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்து வருகின்றன. 88 பேர் பலியாகியுள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில பாஜகஅரசின் அலட்சியத்தால் பல லட்சம் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக, 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பாத நிலையில், அசாமில் மீண்டும்பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் 10 மாவட்டங்களில்(பிரம்மபுத்திரா நதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள்) பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில்,“வடகிழக்கு மாநிலங்களில் அதீத அளவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மேல் அசாம் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் சாலைத் தடைகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், தாழ்வான மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக மலைப்பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க மாநிலபேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும். மேகாலயா, அருணாச்சல்தொடர் மழையின் காரணமாக முக்கிய நதிகள் மற்றும் அவற்றின் கிளை நதிகளின் நீர்மட்டம் உயரக்கூடும்என்பதால், நீர்மட்டமும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அசாமில் வானிலை நிலைமைகள் மேம்படும் வரை பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலைநிலவரங்களையும்,உள்ளூர் நிர்வாகங்கள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, அவசியமான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அசாம் மட்டுமின்றி மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும்ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.