அசாம்: கரிகஞ்ச் தொகுதியில் மறுவாக்குப் பதிவு
12 Apr 2026, 5:30 am

அசாம்: கரிகஞ்ச் தொகுதியில் மறுவாக்குப் பதிவு

கவுகாத்தி: வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்ட அசாம் மாநிலத்தின் கரிகஞ்ச் தொகுதியில் ஏப். 9 அன்று மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது. பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் ஸ்ரீ பூமி மையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் கரிகஞ்ச் தொகுதியில் உள்ள 239 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிட்டது.

இதன்படி, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.