முந்தய பக்கம்

பாஜக ஆளும் அசாமில் அதிர்ச்சி

16 Aug 2026, 8:57 pm
பாஜக ஆளும் அசாமில் அதிர்ச்சி

பாஜக ஆளும் அசாமில் அதிர்ச்சி

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள்பாஜக ஆளும் அசாமின் கோல் பாரா பகுதியில் உள்ளது ஜே.டி.எஸ் மைதானம். இங்கு 80 ஆவது சுதந்திர தின விழா சனியன்று காலை நடைபெற்றது. இந்த விழா அணிவகுப்பில் பங்கேற்ற பல மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என்றும், அவர்கள் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் என்றும் கூறப்படுகிறது. மயங்கி விழுந்த மாணவ - மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டனர். மாணவர்களின் உடல்நிலை சீரானதையெடுத்து,சனியன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

என்ன நடந்தது?

ஜே.டி.எஸ் மைதானத்தில் மாணவ - மாணவிகள் காலை 8 மணி முதலே சுதந்திர தின விழா நடக்கும் இடத்தில்நின்றுகொண்டிருந்தனர். ஆனால், விழாவிற்கு பாஜக எம்எல்ஏக்களும் அதிகாரிகளும் மிகவும் தாமதமாக வந்ததால், சுமார் இரண்டரை மணிநேரம் கழித்து சுதந்திர தின விழா நிகழ்வுகள் தொடங்கப்பட்டன. விழா நடைபெறும் இடங்களில் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப் படை வசதியும் செய்யப்படவில்லை. காலை உணவு, தேநீர் என எதுவும்தரப் படவில்லை. இதனால் மாணவ - மாணவிகள் மயங்கி விழுந்தனர் என்பது குறிப்பி

டத்தக்கது.

மரித்த மனிதநேயம்

மாணவ - மாணவிகள் அணிவகுப்பின் போதுதான் மயங்கி விழுந்தனர்; தேசிய கீதம் பாடப் படும்போது அல்ல. எனினும், 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்த பின்பும்கூட அணிவகுப்பை நிறுத்த யாரும் உத்தரவிடவில்லை; ஆசிரியர்களும் வரவில்லை. மயங்கி விழுந்த மாணவர்களைத் தாண்டியும் மிதித்தும் மற்ற மாணவர்கள் அணிவகுப்பைத் தொடர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, அசாமின் கோல்பாராவில் மனிதநேயம் மரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram