அசாமில் மேகவெடிப்புடன் கனமழை 11 பேர் பலி; 3.6 லட்சம் மக்கள் பாதிப்பு
21 Jul 2026, 8:54 pm

அசாமில் மேகவெடிப்புடன் கனமழை 11 பேர் பலி; 3.6 லட்சம் மக்கள் பாதிப்பு

கவுகாத்தி நாட்டின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வரும் சூழலில், இமயமலைச் சாரல் மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலங்களைப் போலவே வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் அதீத அளவிலும், மேகவெடிப்புடன் கனமழை பெய்து வருகிறது. திங்களன்று பெய்த கன மழைக்கு மாநிலம் முழுவதும் மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக ஜோர்ஹாட் மாவட்டத்தில் 2 இளம் பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள னர். மேகவெடிப்புக்கு நிகராக மழை பெய்துள்ள இடங்களில் ஓடும் முக்கிய நதி கள் அனைத்தும் அபாயக் கட்டத்தைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகின்றன. இத னால் அசாமில் பொதுமக்களின் வாழ்க் கையே முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

794 கிராமங்கள்

இந்த கனமழை தொடர்பாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”மாநிலம் முழு வதும் உள்ள 16 மாவட்டங்களைச் சேர்ந்த 794 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 3.6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் சிவசாகர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 1.5 லட்சத் திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதோடு, 9,179 ஹெக்டேர் பரப்பள விலான பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

1.5 லட்சம் மக்கள்

சாரைதேவில் ஒரு லட்சத்திற்கும் அதி கமான மக்களும், ஜோர்ஹாட்டில் 50,000-க்கும் மேற்பட்டோரும் வெள்ளத் தில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.

சோனிபூர், திப்ரூகர், சிரங், உடல்குரி, பிஸ்வநாத், கோலாகாட், கச்சார், தேமாஜி, தின்சுகியா, நாகான், கர்பி ஆங்லாங், காம ரூப் மற்றும் காமரூப் (பெருநகரம்) உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளத் தின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

மேலும், பிரம்மபுத்திரா, புர்ஹி திஹிங், தன்சிரி மற்றும் திசாங் உள்ளிட்ட பிரதான நதிகள் அனைத்தும் அபாயக் குறிக்கும் மேல் பாய்ந்து வருவதால், கரை யோர மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்லுமாறு தொடர்ச்சியாக எச்ச ரிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழு வதும் அமைக்கப்பட்டுள்ள அரசு நிவா ரண முகாம்களில் சுமார் 10,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சிவ சாகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள னர். இதுவரை 34,905 பேருக்கு உணவுப் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் அவசர கால மருந்துகள் வழங்கப் பட்டுள்ளன. மனிதர்களைத் தாண்டி, சுமார் 6 லட்சம் கால்நடைகளும் இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள தால் அவற்றுக்கான தீவனப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவற்றுடன் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை யின் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணி களுக்காக வரவழைக்கப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.