தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அசாமில் இருவேறு மூளைகாய்ச்சலால் 39 பேர் பலி

19 Jun 2026, 9:01 pm
அசாமில் இருவேறு மூளைகாய்ச்சலால் 39 பேர் பலி

அசாமில் இருவேறு மூளைகாய்ச்சலால் 39 பேர் பலி

வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசா மில் இரண்டு வெவ்வேறு வகை யான மூளைக்காய்ச்சல் பாதிப்பு கள் பரவலாக உள்ளன. கொசுக் களால் பரவும் ஒரு குறிப்பிட்ட வகை மூளைக்காய்ச்சலான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் பாக்டீரியா, வைரஸ், நச்சுக்களால் ஏற்படும் மூளை வீக்க நோயான அக்யூட் என்செபா லிடிஸ் சிண்ட்ரோம் (மூளைக் காய்ச்சல் போன்றது) உள்ளிட்ட பாதிப்புகளால் அசாம் மருத்து வமனை நிரம்பி வருகின்றன.

இதுதொடர்பான நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மைய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில், அதாவது ஜூன் 17 வரை கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் அசாமில் 35 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர். இதில் 7 பேர் உயிரிழ ந்துள்ளனர். அசாமில் இன்னும் கனமழை சீசன் துவங்கவில்லை. இந்த நேரத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவுவது அபாயகரமானது ஆகும். அதே போல அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு 470ஆக உயர்ந்துள்ளது. இதில் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர். அதாவது 2 வெவ்வேறு மூளைக்காய்ச்சல் பாதிப்புகளால் குறுகிய காலத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர்.

கலக்கத்தில் அசாம் மக்கள்

அசாமில் பருவமழைக் காலத் தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கள் அதிகரிக்கும். ஆனால் இன்னும் பருவமழை தொடங்க வில்லை. எனினும் மூளைக் காய்ச்சல் பாதிப்புகள் இரட்டிப் பாகி உள்ளது. வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்ற சூழலில், அசாம் பாஜக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களில் வழக்கம் போல மந்தமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை நெறிமுறைகளை மேம்படுத்த மட்டுமே உத்தர விடப்பட்டுள்ளது. கொசு பரவல் தொடர்பாக சுகாதார நட வடிக்கை எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் அசாம் மக்கள் கலக்கத்தில் உறைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.