மனைவிக்கு 3 நாடுகளின் பாஸ்போர்ட்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக பவன் கேரா மீது காவல்துறையை ஏவிய அசாம் பாஜக முதலமைச்சர்
8 Apr 2026, 5:30 am

மனைவிக்கு 3 நாடுகளின் பாஸ்போர்ட்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக பவன் கேரா மீது காவல்துறையை ஏவிய அசாம் பாஜக முதலமைச்சர்

புதுதில்லி: அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இவரது மனைவி ரினிகி புயான் சர்மா ஐக்கிய அரபு அமீரகம், ஆன்டிகுவா மற்றும் பார்புடாஸ், எகிப்து ஆகிய மூன்று நாடுகளில் வழங்கப்பட்ட செக்யூர் பிளஸ் பாஸ்போர்ட்களை வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஞாயிறன்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இந்தியச் சட்டக்கூறுகளின்படி இந்தியக் குடியுரிமையை அது மதிப்பில்லை. அப்படியிருக்கும்போது ஒரு இந்தியக் குடிமகன் எப்படி பல வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்க முடியும்? ரினிகி புயான் சர்மாவிடம் இந்தியக் குடியுரிமைதான் இருக்கிறதா?' என வினவினார்.

அமெரிக்காவின் வியோமிக் மாகாணத்தில் 'ரினிகி புயான் சர்மா அசெட் கலெக்ஷன் எல்.எல்.சி' என்ற பெயரில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கூறிய புகார்கள் அனைத்தும் பாசிசமானது என்றும், பவன் கேரா மீது சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அசாம் காவல்துறையினர் பவன் கேராவின் தில்லி இல்லத்திற்கு விசாரணைக்காக திடீரென வந்தனர்.